இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புத் தொகுதி ஒன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை (19) திடீரென தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.
குறித்த அடுக்குமாடி குடியிருப்புத் தொகுதியின் இரண்டாவது மாடியிலேயே இந்தத் தீ பரவியுள்ளதாக தெஹிவளை தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
தீ பரவியமை குறித்து தகவல் கிடைத்தவுடன், அதனைத் தணிப்பதற்காக தெஹிவளை தீயணைப்புப் பிரிவுக்குச் சொந்தமான இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து அனுப்பப்பட்டன.
தீயணைப்பு வீரர்களின் கடும் முயற்சியை அடுத்து, தற்போது தீ முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தீயணைப்புப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், இந்த தீ விபத்துக் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
