கிளிநொச்சி திருவையாறு பகுதியில் கிளிநொச்சி கமநல சேவை நிலையத்தினால் கடந்த 2025 ஆம் ஆண்டு பிடியளவு கமநிலத்திற்கு தேசிய வேலை திட்டத்தின் கீழ் விவசாய அமைச்சர் கே டி லால்காந்த பங்குபற்றுதலுடன் நடுகை செய்யப்பட்ட அறுதூறு தென்னம்பிள்ளைகள் காணாமல் போயுள்ளதுடன் தென்னங்கண்றுகள் நடுகை செய்யப்பட்ட நிலம் சிறுவர்களின் விளையாட்டு திடலாக மறியுள்ளது.
கிளிநொச்சி கமநல சேவை நிலையத்தின் கீழ் உள்ள திருவையாறு பகுதியில் கமநல சேவை நிலையத்தினால் கமக்கார அமைப்புக்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19 ஆம் திகதி பிடியளவு கமநிலத்துக்கு தேசிய வேலை திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு பெருந்தொகையான நிதி செலவிடப்பட்டு முன்னெடுக்கப்பட்டது
இதன் போது தென்னைப்பயிர் செய்கையை ஊக்குவிக்கும் வகையில் தென்னை அவ்விருத்தி சபையிடமிருந்து கிளிநொச்சி கமநல சேவை நிலையத்தினால் ஆறுநூறு (600) தென்னம் பிள்ளைகளை பெற்று கமநல சேவைநிலையத்தினால் தெரிவு செய்யப்பட்ட தனியொரு ஒரு பயனாளிக்கு 225 தென்னைகளும் இரண்டு பயனாளிகளுக்கு தலா 150 தென்னைகள் வீதமும் மூன்று பயனாளிகளுக்கு தலா 20 பிள்ளைகளும் ஒரு பயனாளிக்கு 15 தென்னைகளும் என 600 தென்னம் பிள்ளைகள் வழங்கப்பட்டதுடன் தரிசாக காணப்பட்ட காணி துப்புரவு செய்யப்பட்டு விவசாய அமைச்சர் கே.டி லால்காந்த கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் ஆகியோரது பங்கு பற்றலுடன் நிகழ்வில் தென்னை மரங்கள் நடுகை செய்யப்பட்டன.
அத்துடன் அன்றைய தினத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான மாகாண குறித்ததுக்கப்பட்ட நிதியின் கீழ் ஐந்து பயனாளிகளுக்கு தரிசான நிலங்களை துப்புரவு செய்து நிலக்கடலை உற்பத்தி செய்வதற்காக நிலக்கடலை மற்றும் நடுகை இயந்திரங்கள் என்பன வழங்கப்பட்டதுடன் நிகழ்வில் கலந்து கொண்ட விவசாய அமைச்சர் மற்றும் அதிகாரிகளால் நிலக்கடலை நடு கையும் ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டு அதற்கான உபகரணங்களும் வழங்கப்பட்டிருந்தன
2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19ஆம் திகதி நடைபெற்ற குறித்த நிகழ்வில் எவ்வாறு 2026 ஆம் ஆண்டுக்கான குறித்தொதுக்கப்பட்ட நிதியானது பயன்படுத்த முடிந்துள்ளது.
என்பதுடன் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் காணப்படுவதுடன் தென்னை நடுகை செய்யப்பட்ட காணியானது பராமரிப்பு இன்றி தென்னைகளும் அழிவடைந்து தற்போது சிறுவர்களின் விளையாட்டு திடலாகவும் மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஊழலற்ற அரசாங்கத்தின் அமைச்சர் பிரதி அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோரை அழைத்து முன்னெடுகப்பட்ட ஒரு மிக இத்திட்டம் கைவிடப்பட்டமையானது கடும் விமர்சனங்களையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தி உள்ளது.
