Breaking
ரீஸா ஹெண்ட்றிக்ஸ், குல்பாதின் நய்ப் அபாரம்; கண்டி றோயல்ஸை 18 ஓட்டங்களால் வென்றது தம்புள்ள சிக்ஸர்ஸ்
WorldVirakesari

ரீஸா ஹெண்ட்றிக்ஸ், குல்பாதின் நய்ப் அபாரம்; கண்டி றோயல்ஸை 18 ஓட்டங்களால் வென்றது தம்புள்ள சிக்ஸர்ஸ்

July 18, 2026·2 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01தம்புள்ள சிக்ஸர்ஸ் 18 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
  2. 02கண்டியின் ரோயல்ஸ் அணிக்கு எதிரான லங்கா பிரீமியர் லீக் போட்டி.
  3. 03ரிஸா ஹெண்ட்றிக்ஸ் 87 ஓட்டங்கள் எடுத்து சிறந்த புள்ளிகளைச் செலுத்தினார்.
  4. 04குல்பாதின் நய்ப் 46 ஓட்டங்களுடன் அதிக வெற்றியினைப்படுத்தினார்.
  5. 05தம்புள்ள சிக்ஸர்ஸ் 205 ஓட்டங்களை எட்டியது.
  6. 06கண்டி ரோயல்ஸ் 187 ஓட்டங்களை எடுத்து தோல்வியாக முடிந்தது.
  7. 07ஆட்டநாயகன் குல்பாதின் நய்ப்.
  8. 08மறைவுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

(நெவில் அன்தனி)

கண்டி றோயல்ஸ் அணிக்கு எதிராக கொழும்பு எஸ்எஸ்சி மைதானத்தில் இன்று சனிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற லங்கா பிறீமியர் லீக் போட்டியில் தம்புள்ள சிக்ஸர்ஸ் அணி 18 ஓட்டங்களால் இறுக்கமான வெற்றியீட்டியது.

ரிஸா ஹெண்ட்றிக்ஸின் அபார துடுப்பாட்டம், குல்பாதின் நய்பின் சகலதுறை ஆட்டம் என்பன தம்புள்ள சிக்ஸர்ஸ் அணியை இலகுவாக வெற்றி அடையச் செய்தன.

அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 7ஆவது விக்கெட்டில் பகிர்ந்து 94 ஓட்டங்களும் இந்த வெற்றியில் முக்கிய பங்காற்றியது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ள சிக்ஸர்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 205 ஓட்டங்களைக் குவித்தது.

ரீஸா ஹெண்ட்றிக்ஸ் 50 பந்துகளில் 11 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 87 ஓட்டங்களுடனும் குல்பாதின் நய்ப் 23 பந்துகளில் 46 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

அவர்களை விட சாஹிப்ஸதா பர்ஹான் 23 ஓட்டங்களையும் மார்க்ஸ் அக்கர்மன் 16 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் துஷான் ஹேமன்த 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நுவன் துஷார 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கண்டி றோயல்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

டேல் பிலிப்ஸ் 52 ஓட்டங்களையும் லஹிரு உதார 44 ஓட்டங்களையும் விஜய் ஷங்கர் ஆட்டம் இழக்காமல் 41 ஓட்டங்களையும் வனிந்து ஹசரங்க 21 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்தவீச்சில் குல்பாதின் நய்ப் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மொஹம்மத் வசிம் 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: குல்பாதின் நய்ப்

இப் போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் கார்பீல்ட் சோர்பஸின் மறைவுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அத்துடன் வீரர்கள் கறுப்புப் பட்டி அணிந்து விளையாடினர்.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/253623
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
கோப்புகีฬาலங்காபிரீமியர்ஓட்டங்கள்துடுப்பாட்டம்
BestWeb.lk Top Web 2026 June Qualified