Breaking
புதிய அரசியலமைப்பின் மூலமே நீதியரசர்களின் பதவிக்காலத்தை திருத்தம் செய்யலாம் – அஜித் பி. பெரேரா!
WorldVirakesari

புதிய அரசியலமைப்பின் மூலமே நீதியரசர்களின் பதவிக்காலத்தை திருத்தம் செய்யலாம் – அஜித் பி. பெரேரா!

July 18, 2026·2 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01புதிய அரசியலமைப்பின் மூலம் நீதியரசர்களின் பதவி காலம் திருத்தப்படலாம்.
  2. 02அஜித் பி.பெரேரா, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர், இது முறையற்றது என கூறினார்.
  3. 03அரசாங்கம் நீதித்துறையை அரசியல்மயமாக்க முயற்சிக்கிறது.
  4. 04நீதிமன்றத்திற்கான நியமனங்களை தாமதப்படுத்தினால் பதவி உயர்வுகள் தடுக்கப்படும்.
  5. 05மிதமான அரசியலமைப்பின் மூலம் நீதியரசர்களின் பதவி காலத்தை நீட்டிக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு.
  6. 06கீழ்நிலைக் நீதிமன்றங்களில் வெற்றிடம் இருந்தால் உயர் நீதிமன்ற நியமனங்கள் தேவையில்லை.

(இராஜதுரை ஹஷான்)

புதிய அரசியலமைப்பின் ஊடாகவே நீதியரசர்களின் பதவி காலத்தை திருத்தம் செய்யலாம். தற்போது தெரிவு செய்யப்பட்ட வகையில் நீதியரசர்களின் பதவி்காலத்தை நீட்டிப்பது முறையற்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி.பெரேரா தெரிவித்தார்.

கொழும்பில் சனிக்கிழமை (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

நீதித்துறையை அரசியல்மயமாக்க அரசாங்கம் முயற்சிக்கிறது.நீதிமன்ற கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி பொறுப்புக் கூற வேண்டும்.

கீழ் நிலை நீதிமன்றங்களில் வெற்றிடம் காணப்படுவால் உயர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களுக்கான நியமனங்களை வழங்க வேண்டிய அவசியம் இல்லை என்று ஜனாதிபதி குறிப்பிடுகிறார் .இது முற்றிலும் தவறானது.

நீதியரசர்களின் நியமனத்தை தாமதப்படுத்துவதால் பல நீதிபதிகளின் பதவி உயர்வு தடுக்கப்படுகிறது.இது முறையற்றதொரு செயற்பாடு.

உயர் நீதிமன்றத்துக்கு நியமனம் பெறும் தகைமை உள்ளவர்கள், மேன்முறையீட்டு நீதிமன்றத்துடன் ஓய்வுப் பெறும் நிலை காணப்படுகிறது. கடந்த காலங்களிலும் அவ்வாறான நிலைமையே காணப்பட்டது.

அரசியலமைப்பு திருத்தம் ஒன்றை மேற்கொண்டு பிரதம நீதியரசர் மற்றும் நீதியரசர்களின் பதவி காலத்தை நீட்டிப்பதற்கு அரசாங்கம் ்முயற்சிக்கிறது.அதற்கு நாங்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினோம்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் ஊடாக அரசாங்கம் நீதிபதிகளின் பதவி காலத்தை திருத்தம் செய்யலாம் அதில் எமக்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது.ஆனால் தெரிவு செய்யப்பட்ட அடிப்படையில் மாத்திரம் நீதியரசர்களின் பதவி காலத்தை நீட்டிப்பது முறையற்றது என்றார்

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/253603
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
அரசியலமைப்புநீதித்துறைஅரசாங்கம்பதவி உயர்வுமுக்கியம்
BestWeb.lk Top Web 2026 June Qualified