Breaking
சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionLeading clothing retailer owner remanded over Customs probeProtecting street animals a shared responsibility, says Prime MinisterKushbu’s ‘Maharanis – Tinsel Queens’ to showcase Sri Lanka’s culture and scenic beautyMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri Lankaசந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionLeading clothing retailer owner remanded over Customs probeProtecting street animals a shared responsibility, says Prime MinisterKushbu’s ‘Maharanis – Tinsel Queens’ to showcase Sri Lanka’s culture and scenic beautyMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri Lanka
கோலாகல ஆரம்ப விழாவுடன் எல்பிஎல் தொடங்கியது; கோல் கெலண்ட்ஸிடம் நடப்பு சம்பியன் ஜெவ்னா கிங்ஸ் சரண்
SportsVirakesari

கோலாகல ஆரம்ப விழாவுடன் எல்பிஎல் தொடங்கியது; கோல் கெலண்ட்ஸிடம் நடப்பு சம்பியன் ஜெவ்னா கிங்ஸ் சரண்

July 18, 2026·1 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 016ஆவது லங்கா பிறீமியர் லீக்கின் முதலாவது போட்டி வன்கொண்டது.
  2. 02கோல் கெலண்ட்ஸ் அணிக்கு வெற்றி, ஜெவ்னா கிங்ஸ் ம அழிந்தது.
  3. 03கோல் கெலண்ட்ஸ் 20 ஓவர்களில் 213 ஓட்டங்கள் பெற்றது.
  4. 04ஜெவ்னா கிங்ஸ் 19.4 ஓவர்களில் 177 ஓட்டங்களில் தோல்வி அடைந்தது.
  5. 05ஆட்டநாயகன்: சரித் அசலன்க.

(நெவில் அன்தனி)

பிரமாண்டமான ஆரம்ப விழாவுடன் எஸ்எஸ்சி மைதானத்தில் வெள்ளிக்கிழமை (17) தொடங்கிய 6ஆவது லங்கா பிறீமியர் லீக்கின் முதலாவது போட்டியில் நடப்பு உப சம்பியன் கோல் கெலன்ட்ஸ் அணியிடம் 36 ஓட்டங்களால் நடப்பு சம்பியன் ஜெவ்னா கிங்ஸ் சரணடைந்தது.

இப் போட்டிக்கு முன்பதாக அரங்கேற்றப்பட்ட கலை, கலாசார, இசை நிகழ்ச்சிகளும் 500 ட்ரோன்களின் வான்வெளி சாகசங்களும் பார்வையாளர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது.

அத்துடன் கோல் கெலன்ட்ஸின் முதல் இன்னிங்ஸ் நிறைவடைந்தவுடன் நடத்தப்பட்ட கதிரியக்க காட்சிகள் மேலும் ரசிகர்களை பிரமிக்க வைத்தது.

முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட கோல் கெலன்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 213 ஓட்டங்களைப் பெற்றது.

இதில் சரித் அசலன்க 65 ஓட்டங்களையும் சாம் ஹாப்பர் 40 ஓட்டங்களையும் சஹான் ஆராச்சிகே 35 ஓட்டங்களையும் அணித் தலைவர் தசுன் ஷானக்க ஆட்டம் இழக்காமல் 31 ஓட்டங்களையும் மொஹம்மத் நவாஸ் 21 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் லிஸாட் வில்லியம்ஸ் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பியூஷ் சௌலா 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜெவ்னா கிங்ஸ் 19.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 177 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

இதில் துனித் வெல்லாலகே 40 ஓட்டங்களையும் அவிஷ்க பெர்னாண்டோ 34 ஓட்டங்களையும் காமில் மிஷார 28 ஓட்டங்களையும் சமிந்து விக்ரமசிங்க 24 ஓட்டங்களையும் பெற்றனர்.

ந்துவீச்சில் ஏஷான் மாலிங்க 25 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஆக்கிப் ஜாவேட் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

தசுன் ஷானக்க, சரித் அசலன்க, விஜயகாந்த் வியாஸ்காந்த் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: சரித் அசலன்க

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/253540
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
क्रिकेटलंकाபோட்டிகள்வெற்றிகோல் கெலண்ட்ஸ்
BestWeb.lk Top Web 2026 June Qualified