Breaking
Sri Lanka Evaluates Japanese Qdenga VaccineCOPE, COPA Reports Can Now Trigger CID, Bribery ProbesEx-State Minister’s Son Arrested Over Rs. 20 Mn RobberyCourt Reissues Arrest Warrant for Basil RajapaksaOpposition Takes Aim at Justice Minister | But Not Everyone Joins the FightSri Lanka’s Inflation Hits 6.5% in JuneDesperate Cries Heard Before Deadly Factory Inferno Took Five Livesவிக்ரம் -1இன் சுற்றுப்பாதை வெற்றி : இந்தியாவின் 100 பில்லியன் டொலர் விண்வெளிப் பொருளாதாரத்திற்கு எவ்வாறு வலு சேர்க்கும்?Fastest Man in South Asia Calls Time on Glittering CareerNavy Seizes Over 2.6 Tonnes of Narcotics So Far This YearSri Lanka Evaluates Japanese Qdenga VaccineCOPE, COPA Reports Can Now Trigger CID, Bribery ProbesEx-State Minister’s Son Arrested Over Rs. 20 Mn RobberyCourt Reissues Arrest Warrant for Basil RajapaksaOpposition Takes Aim at Justice Minister | But Not Everyone Joins the FightSri Lanka’s Inflation Hits 6.5% in JuneDesperate Cries Heard Before Deadly Factory Inferno Took Five Livesவிக்ரம் -1இன் சுற்றுப்பாதை வெற்றி : இந்தியாவின் 100 பில்லியன் டொலர் விண்வெளிப் பொருளாதாரத்திற்கு எவ்வாறு வலு சேர்க்கும்?Fastest Man in South Asia Calls Time on Glittering CareerNavy Seizes Over 2.6 Tonnes of Narcotics So Far This Year
செம்மணி மனித புதைகுழிக்குள் மண்டையோடு அற்ற நிலையிலும் என்புக்கூடுகள் : இது வரை 444 என்புக் கூடுகள் மீட்பு !
WorldVirakesari

செம்மணி மனித புதைகுழிக்குள் மண்டையோடு அற்ற நிலையிலும் என்புக்கூடுகள் : இது வரை 444 என்புக் கூடுகள் மீட்பு !

July 21, 2026·1 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01செம்மணி மனித புதைகுழியின் 39வது நாள் அகழ்வு பணிகள் இன்று நடைபெற்றுள்ளவை.
  2. 02இன்று 13 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
  3. 03சில என்புக்கூடுகளில் மண்டையோடு இல்லாத நிலை காணப்படுகின்றது.
  4. 04முன்பு அடையாளம் காணப்பட்ட 04 என்ப்குடைகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
  5. 05мகளிர்கள் தொடர்பான மேலதிக தகவல் ஆய்வுகளின் பின்னர் வெளியாகும்.

செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து மண்டையோடு இல்லாத என்புக்கூடுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (21) அடையாளம் காணப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 39ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 39ஆவது நாளான இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை, அருகருகே இரு சிறுவர்களின் என்புக்கூடு உட்பட 13 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. சில என்புகள் குவியலாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

அத்துடன் சில என்புக்கூடுகளுக்கு மண்டையோடுகள் இல்லாத நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதேவேளை குவியலாக காணப்பட்ட என்பு குவியலுக்குள் மண்டையோடுகளும் காணப்படுவதனால், ஆய்வுகளின் பின்னரே அவை தொடர்பில் மேலதிகமான தகவல் கூற முடியும் என சட்டத்தரணி ஞா.ரனிதா தெரிவித்தார்.

அதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் 03 சிறுவர்களின் என்புக்கூடுகள் உள்ளிட்ட 04 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் என இதுவரையில் 93 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், 467 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 444 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/253913
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
செம்மணிபுதைகுழிஅகழ்வுஎன்னுப்புகள்குற்றம்
BestWeb.lk Top Web 2026 June Qualified