அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவினால் தாக்கல் செய்யப்பட்ட எழுத்தானை மனு மீதான விசாரணை எதிர்வரும் 27ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து தடுப்புக்காவலில் வைத்துள்ளமையை சவாலுக்குட்படுத்தி, சுரேஷ் சலேவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
