Breaking
Ex-State Minister’s Son Arrested Over Rs. 20 Mn RobberyCourt Reissues Arrest Warrant for Basil RajapaksaOpposition Takes Aim at Justice Minister | But Not Everyone Joins the FightSri Lanka’s Inflation Hits 6.5% in JuneDesperate Cries Heard Before Deadly Factory Inferno Took Five Livesவிக்ரம் -1இன் சுற்றுப்பாதை வெற்றி : இந்தியாவின் 100 பில்லியன் டொலர் விண்வெளிப் பொருளாதாரத்திற்கு எவ்வாறு வலு சேர்க்கும்?Fastest Man in South Asia Calls Time on Glittering CareerNavy Seizes Over 2.6 Tonnes of Narcotics So Far This YearCabinet Approves Purchase of 600 Air-Conditioned Buses For SLTBAirBus Scandal: CID, CIABOC Team Flies to AustraliaEx-State Minister’s Son Arrested Over Rs. 20 Mn RobberyCourt Reissues Arrest Warrant for Basil RajapaksaOpposition Takes Aim at Justice Minister | But Not Everyone Joins the FightSri Lanka’s Inflation Hits 6.5% in JuneDesperate Cries Heard Before Deadly Factory Inferno Took Five Livesவிக்ரம் -1இன் சுற்றுப்பாதை வெற்றி : இந்தியாவின் 100 பில்லியன் டொலர் விண்வெளிப் பொருளாதாரத்திற்கு எவ்வாறு வலு சேர்க்கும்?Fastest Man in South Asia Calls Time on Glittering CareerNavy Seizes Over 2.6 Tonnes of Narcotics So Far This YearCabinet Approves Purchase of 600 Air-Conditioned Buses For SLTBAirBus Scandal: CID, CIABOC Team Flies to Australia
7 மாதங்களில் பெருமளவிலான போதைப்பொருட்கள் கைப்பற்றல் – கடற்படை
WorldVirakesari

7 மாதங்களில் பெருமளவிலான போதைப்பொருட்கள் கைப்பற்றல் – கடற்படை

July 21, 2026·2 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01அரசாங்கத்தின் ‘முழு நாடும் ஒன்றாக’ திட்டத்திற்கு ஆதரவாக கடற்படை நடவடிக்கைகள்.
  2. 02சர்வதேச போதைப்பொருள் கடத்தலுக்கு கடற்றடுப்புகள்.
  3. 03256,200 கிலோகிராம் கொக்கேன் கைப்பற்றப்பட்டுள்ளது.
  4. 041,080.894 கிலோகிராம் ஹெரோயினும் பிராணிசி.
  5. 05பலநாள் மீன்பிடிப் படகுகள் கைப்பற்றப்பட்டன.
  6. 06கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட படகுகள் சட்டத்திற்கு ஒப்படைக்கப்பட்டன.
  7. 07போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்துகொண்டு இருக்கின்றன.
  8. 08போதைப்பொருட்களற்ற பாதுகாப்பான இலங்கையை உருவாக்குதல் நோக்கம்.

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், அரசாங்கத்தின் ‘முழு நாடும் ஒன்றாக’ போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்திற்கு ஆதரவாக, இலங்கை கடற்படை கடல் எல்லை முழுவதும் தீவிர கண்காணிப்பு மற்றும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டலின் கீழ், முப்படைகள், இலங்கை பொலிஸ், விசேட அதிரடிப்படை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் மற்றும் வெளிநாட்டு உளவுத்துறையினரின் தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மூலம், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளுக்கு கடும் பின்னடைவு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, 2026 ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கடல்சார் நடவடிக்கைகளில், 256.200 கிலோகிராம் கொக்கேன், 1,080.894 கிலோகிராம் ஹெரோயின், 667.695 கிலோகிராம் கேரள கஞ்சா, 590.806 கிலோகிராம் ஐஸ் மற்றும் 56.091 கிலோகிராம் ஹஷீஷ் ஆகிய பெருமளவிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கைகளின் போது, போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட பல உள்ளூர் பலநாள் மீன்பிடிப் படகுகளும் கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

நாட்டிற்குள் போதைப்பொருட்கள் ஊடுருவுவதைத் தடுக்கும் நோக்கில், கடத்தல்காரர்களுக்கு எதிரான கடல்சார் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றும், போதைப்பொருளற்ற பாதுகாப்பான இலங்கையை உருவாக்கும் முயற்சியில் கடற்படை தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/253817
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
போதைப்பொருள்கடற்படைகடத்தல்சுற்றிவளைப்புஒருங்கிணைப்பு
BestWeb.lk Top Web 2026 June Qualified