Breaking
சி.டி. விக்கிரமரத்ன மரணம் : 10-க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலம் பதிவு !
WorldVirakesari

சி.டி. விக்கிரமரத்ன மரணம் : 10-க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலம் பதிவு !

July 18, 2026·1 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்ரமரத்ன உயிரிழந்தார்.
  2. 0210க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
  3. 03அவர் வீட்டில் சுடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
  4. 04மரணம் தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
  5. 05தகவலின் அடிப்படையில், அதிகாரிகள் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
  6. 06மரணத்துக்கான இறுதிச் சடங்குகள் 20ம் தேதி நடைபெறும்.

( நமது நிருபர் )

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்ரமரத்ன உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 10க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

63 வயதான அவர், வெள்ளிக்கிழமை (17) காலை மாலம்பே, தலாஹேன பகுதியில் உள்ள அவரது வீட்டில் சுடப்பட்ட நிலையில் உயிரிழந்திருந்தார்.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தனது பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கியைப் பரிசோதிப்பதாக குறிப்பிட்டு துப்பாக்கியை அவரிடமிருந்து வாங்கி, அதைக் கொண்டு தன்னைத்தானே சுட்டுக்கொண்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த மரணம் தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால், பொலிஸ் ஒழுக்கக் கோவைக்கு அமைவாக அவருக்கு உத்தியோகபூர்வ பொலிஸ் மரியாதைகள் எதுவும் வழங்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் நடந்த போது, வீட்டில் இருந்த இரு பாதுகாப்பு உத்தியோகத்தர்களைத் தவிர, முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மனைவியும் இளைய மகனும் மட்டுமே இருந்துள்ளனர். இந்த மரணம் குறித்து முறையான விசாரணைகளை நடத்துமாறு பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய விசேட உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளார்.

இதற்கமைய, கொழும்பு திசைக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரின் வழிகாட்டலின் கீழ், மேல் மாகாண தெற்கு விசேட விசாரணைப் பிரிவினரால் பரந்தளவிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக, நுகேகொட கோட்டத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் அறிவுறுத்தலின் பேரில் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையின் கீழ் மாலம்பே பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் தனியான விசாரணையொன்றை மேற்கொண்டு வருகிறார்.

முன்னாள் பொலிஸ் மா அதிபரின் பூதவுடல் இன்று்19) பொரள்ளையிலுள்ள தனியார் மலர்சாலையொன்றில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

அதன் பின்னர், அவரது உடலம் மீதான இறுதிச் சடங்குகள் திங்கட்கிழமை (20) பிற்பகல் பொரள்ளை பொது மயானத்தில் நடைபெறவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/253601
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
சி. டி. விக்ரமரத்னமரணம்பொலிஸ்விசாரணைதற்கொலை
BestWeb.lk Top Web 2026 June Qualified