Breaking
சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionLeading clothing retailer owner remanded over Customs probeProtecting street animals a shared responsibility, says Prime MinisterKushbu’s ‘Maharanis – Tinsel Queens’ to showcase Sri Lanka’s culture and scenic beautyMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri Lankaசந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionLeading clothing retailer owner remanded over Customs probeProtecting street animals a shared responsibility, says Prime MinisterKushbu’s ‘Maharanis – Tinsel Queens’ to showcase Sri Lanka’s culture and scenic beautyMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri Lanka
கத்தாரில் வான்வெளியில் ஏவுகணை இடைமறிப்பு: சிதறிய பாகங்கள் விழுந்ததில் சிறுவர் உட்பட மூவர் காயம்!
WorldVirakesari

கத்தாரில் வான்வெளியில் ஏவுகணை இடைமறிப்பு: சிதறிய பாகங்கள் விழுந்ததில் சிறுவர் உட்பட மூவர் காயம்!

July 12, 2026·3 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தீவிர போர் மோதல் தொடர்ந்து நடக்கிறது.
  2. 02கத்தாரில் ஈரான் ஏவுகணைகள் அழிக்கப்பட்டுள்ளன.
  3. 03இந்த தாக்குதலில் மூன்று பேர் காயமடைந்தனர், ஒருவர் சிறுவர்.
  4. 04முக்கிய படையணிகள் 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளன.
  5. 05ஈரான், அமெரிக்க இடங்களை நோக்கி ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் அனுப்பியுள்ளது.
  6. 06ஜோர்டான் மற்றும் அமீரகங்கள் தீவிரமாக எதிர்கொண்டும் அறிவித்துள்ளன.
  7. 07தெற்கு ஈரானில் 140 நிகழ்வுகளை அமெரிக்கா குண்டுவீசியுள்ளது.
  8. 08ஈரான் கடந்த தினம் பரந்த அளவிலான தரித்தலை அடைந்துள்ளது.

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தீவிரமடைந்துள்ள போர் மோதலின் தொடர்ச்சியாக, கத்தார் மீது ஈரான் ஏவிய ஏவுகணைகள் வான்வெளியில் இடைமறித்து அழிக்கப்பட்டபோது, அவற்றின் சிதறிய பாகங்கள் குடியிருப்புப் பகுதிகளில் விழுந்ததில் ஒரு சிறுவர் உட்பட மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

கத்தார் உள்நாட்டு அமைச்சு இத்தகவலை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

கத்தார் வான்பரப்புக்குள் ஊடுருவ முயன்ற ஈரானிய ஏவுகணைகளைத் தங்களது ஆயுதப் படைகள் வெற்றிகரமாக இடைமறித்து அழித்ததாகக் கத்தார் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும், வான்வெளியில் ஏவுகணைகள் வெடித்ததால் சிதறிய இரும்புப் பாகங்கள் மற்றும் குப்பைகள் தோஹா நகரின் குடியிருப்புப் பகுதிகளில் விழுந்தன. இதில் ஒரு சிறுவர் உட்பட மூன்று சிவிலியன்கள் காயமடைந்துள்ளனர்.

இதுகுறித்து கத்தார் உள்நாட்டு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில்,

"பாதுகாப்பு அதிகாரிகள் முழு தயார் நிலையில் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றனர். சமூகத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், அத்தியாவசிய சேவைகள் தடையின்றி கிடைப்பதற்கும் விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன" எனத் தெரிவித்துள்ளது.

தெற்கு ஈரானில் உள்ள சுமார் 140 இராணுவ இலக்குகளை அமெரிக்கா குண்டுவீசி அழித்ததற்குப் பதிலடியாக, வளைகுடா பிராந்தியத்திலுள்ள பல நாடுகளை நோக்கி ஈரான் இன்று (12) ஞாயிற்றுக்கிழமை காலை ஏவுகணைகள் மற்றும் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ட்ரோன்களை ஏவிப் பெரும் தாக்குதலை நடத்தியுள்ளது.

தங்களை நோக்கி வந்த ஈரானிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைத் தங்களது வான்பாதுகாப்பு அமைப்புகள் தீவிரமாக எதிர்கொண்டு அழித்ததாக அமீரக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் தொடர்ச்சியாகப் போர் அபாய எச்சரிக்கை ஒலிகள் எழுப்பப்பட்டதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி புகுந்துள்ளனர்.

ஈரானால் ஏவப்பட்ட மூன்று ஏவுகணைகள் ஜோர்தான் நாட்டு எல்லைக்குள் விழுந்துள்ளன. எனினும், இதனால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என ஜோர்டான் இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.

அமெரிக்க இராணுவத்தின் பிராந்தியத் தளங்களை முற்றாக முடக்கியுள்ளதாக ஈரானியப் புரட்சிகரக் காவல் படை தெரிவித்துள்ளது. எனினும், இந்த விபரங்களை அமெரிக்காவோ அல்லது சம்பந்தப்பட்ட பிற நாடுகளோ இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

பிரின்ஸ் ஹஸன் விமானத் தளத்திலிருந்த அமெரிக்காவின் எம்கியூ-9 (MQ-9) ட்ரோன் நிறுத்தகங்கள் மற்றும் கட்டளை மையத்தை அழித்துள்ளதாக ஜோர்தான்தெரிவித்துள்ளது.

அமெரிக்க இராணுவத்திற்குச் சொந்தமான ரேடார் தளம் மற்றும் பேட்ரியாட் ஏவுகணை பாதுகாப்புத் தளத்தைத் தாக்கியதாகக் குவைத் தெரிவித்துள்ளது.

அல் உதைத் தளத்திலிருந்த அமெரிக்கப் போர் விமானப் பராமரிப்பு மையம் மற்றும் தலைமையகத்தை ஏவுகணைகள் மூலம் தகர்த்ததாக கத்தார் உரிமை கோரியுள்ளது.

ஓமான் துகம் துறைமுகத்தில் அமெரிக்க விமானம் தாங்கி போர்க்கப்பல்களுக்கு எரிபொருள் மற்றும் தளவாட ஆதரவு வழங்கும் தளங்களை அழித்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணையில் சைப்ரஸ் நாட்டு வணிகக் கப்பல் ஒன்றின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் மாயமாகியுள்ள சூழலில், வளைகுடா நாடுகள் முழுவதும் இந்த ஏவுகணைத் தாக்குதல்களால் தற்பொழுது உச்சக்கட்டப் போர் பதற்றம் நிலவி வருகிறது.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/252945
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
ஈரான்கத்தார்போர்அமெரிக்காஆபத்து
BestWeb.lk Top Web 2026 June Qualified