Breaking
ஹோமாகமவில் சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களுடன் 16 பேர் கைது!
WorldVirakesari

ஹோமாகமவில் சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களுடன் 16 பேர் கைது!

July 18, 2026·2 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01ஹோமாகம பொலிஸ் 16 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 16 ஓட்டுநர்களை கைது செய்தனர்.
  2. 02சோதனைகள் ஆகிய பொழுதில் இந்த கைது நடந்தது.
  3. 03மோட்டார் சைக்கிள்களில் பல்வேறு சட்டவிரோத மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.
  4. 04போலிஸார் மோட்டார் சைக்குள்களை பரிசோதிக்க அனுப்பியுள்ளனர்.
  5. 05கைது செய்யப்பட்ட ஓட்டுநர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
  6. 06அவர்கள் ஜூலை 22ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகும்.

ஹோமாகம பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினரால் சட்டவிரோதமான முறையில் மாற்றியமைக்கப்பட்ட 16 மோட்டார் சைக்கிள்களுடன் 16 ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹோமாகம பகுதியில் அதிவேகமாகச் சென்று அதிக சத்தத்தை எழுப்பும் மோட்டார் சைக்கிள்களைக் குறிவைத்து ஹோமாகம பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் அதிகாரிகளால் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளன.

கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்களில், சைலன்சர்களை மாற்றுதல், பக்கவாட்டுக் கண்ணாடிகள் மற்றும் மண் காப்பான்களை அகற்றுதல், இலக்கத் தகடுகள் இல்லாமை மற்றும் விளக்கு அமைப்புகளில் மாற்றம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு அங்கீகரிக்கப்படாத மாற்றங்கள் செய்யப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மோட்டார் சைக்கிள்கள் பரிசோதனைக்காக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வாகனப் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்படுவதற்காக பொலிஸாரின் காவலில் வைக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு, எதிர்வரும் ஜூலை 22ஆம் திகதி ஹோமாகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் ஹோமாகம தலைமையக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/253572
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
ஹோமாகமபோலீசார்மோட்டார் சைக்கிள்கைதுசோதனை
BestWeb.lk Top Web 2026 June Qualified