Breaking
வியட்நாமில் திடீர் வெள்ளப்பெருக்கு : 4 பேர் உயிரிழப்பு; 4 பேர் மாயம்!
WorldVirakesari

வியட்நாமில் திடீர் வெள்ளப்பெருக்கு : 4 பேர் உயிரிழப்பு; 4 பேர் மாயம்!

July 18, 2026·1 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01வியட்நாமின் லாய் சாவ் மாகாணத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
  2. 02இதில் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 4 பேர் காணமல் போயினர்.
  3. 03மேலும் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
  4. 04மீட்புப் பணிகளில் சிரமங்கள் உள்ளன.
  5. 05கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.
  6. 06மீட்புக் குழுக்கள் செயலில் ஈடுபட்டு உள்ளனர்.

வியட்நாமின் வடக்குப் பகுதியில் லாய் சாவ் (Lai Chau) மாகாணத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி குறைந்தது 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் காணமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வியட்நாமின் வடக்குப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக, வெள்ளிக்கிழமை (17) அதிகாலை முவோங் தான் (Muong Than) கிராமத்தில் திடீர் வெள்ளபெருக்கு ஏற்பட்டது.

இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி 7 பேர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வெள்ளபெருக்கு ஏற்பட்ட முவோங் தான் பகுதியில், மீட்புக் குழுவினர் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையினர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மீட்புப் பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ள நிலையில், காணமல்போன 4 பேரைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/253585
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
வெள்ளப்பெருக்குவியட்நாம்மீட்புப் பணிகள்
BestWeb.lk Top Web 2026 June Qualified