Breaking
பணச்சுத்திகரிப்பு வழக்கு: யோஷித ராஜபக்ஷ வழக்கு விசாரணை ஜூலை 24 வரை ஒத்திவைப்பு
WorldVirakesari

பணச்சுத்திகரிப்பு வழக்கு: யோஷித ராஜபக்ஷ வழக்கு விசாரணை ஜூலை 24 வரை ஒத்திவைப்பு

July 18, 2026·1 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01யோஷித ராஜபக்ஷக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
  2. 02கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைகள் நடைபெற்றன.
  3. 03சாட்சிகளின் சாட்சியம் பதிவு செய்யப்பட்டது.
  4. 04ஜூலை 24 வரை மேலதிக விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டன.
  5. 0573 மில்லியன் ரூபாவிற்கு மேற்பட்ட காணித் துண்டுகள் சந்தா குறித்து விவாதம்.

தெஹிவளை மற்றும் இரத்மலானை பகுதிகளில் 73 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஐந்து காணித் துண்டுகளை கொள்வனவு செய்ததன் மூலம், கறுப்பு பணச்சுத்திகரிப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமிழித்துள்ளதாக யோசித்த ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கின் மேலதிக விசாரணைகளை ஜூலை 24 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள கறுப்பு பணச்சுத்திகரிப்பு வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (17) நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டாரவின் வழிகாட்டலின் கீழ், முறைப்பாட்டாளர் தரப்பு சாட்சிகளிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

யோஷித ராஜபக்ஷ சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸும் வாதத்தரப்பு சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்தினார்.

விசாரணைகளைத் தொடர்ந்து, வழக்கின் மேலதிக விசாரணைகளை ஜூலை 24 ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

தெஹிவளை மற்றும் இரத்மலானை பகுதிகளில் 73 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஐந்து காணித் துண்டுகளை கொள்வனவு செய்ததன் மூலம், கறுப்பு பணச்சுத்திகரிப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்துள்ளதாகக் கூறிஈ யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/253544
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
யோஷித ராஜபக்ஷகொழும்பு நீதிமன்றம்கறுப்பு பணம்வழக்குசாட்சியம்
BestWeb.lk Top Web 2026 June Qualified