கண்டி - அலவத்துகொடை, படுகொட பகுதியில் மண் மேடு சரிந்து விழுந்ததில் 49 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அலவத்துகொடைபொலிஸார் தெரிவித்தனர்.
கட்டுமானப் பணியில் உள்ள வீடு ஒன்றிற்காக அத்திவாரம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த போதே இந்த மண் மேடு சரிந்து விழுந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர் மீட்கப்பட்டு அக்குரணை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
உயிரிழந்தவர் அலவத்துகொடை பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், அலவத்துகொடைபொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
