இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட, முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகன் ரகித ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சரித் அபேசிங்க மற்றும் முன்னாள் விமான சேவைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் அருண ஸ்ரீ வருண ஆகியோரின் விளக்கமறியலை நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
அதன்படி, இந்த மூவரையும் எதிர்வரும் 28ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று (17) உத்தரவிட்டுள்ளார்.
பாதாள உலகக் கும்பல் உறுப்பினர் ஹரக் கட்டாவின் மனைவியிடம் முற்பணமாக 1200 இலட்சம் ரூபா இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் இந்த மூவரும் கைது செய்யப்பட்டனர்.
