Breaking
சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionLeading clothing retailer owner remanded over Customs probeProtecting street animals a shared responsibility, says Prime MinisterKushbu’s ‘Maharanis – Tinsel Queens’ to showcase Sri Lanka’s culture and scenic beautyMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri Lankaசந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionLeading clothing retailer owner remanded over Customs probeProtecting street animals a shared responsibility, says Prime MinisterKushbu’s ‘Maharanis – Tinsel Queens’ to showcase Sri Lanka’s culture and scenic beautyMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri Lanka
ஹோமாகமவில் நபரொருவர் கழுத்தறுத்துக் கொலை: உடமைகள் கொள்ளை!
WorldVirakesari

ஹோமாகமவில் நபரொருவர் கழுத்தறுத்துக் கொலை: உடமைகள் கொள்ளை!

July 17, 2026·2 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01ஹோமாகமவில் एका கடக்கோ முன் மீட்கப்பட்ட நபர் கொலை செய்யப்பட்டார்.
  2. 0238 வயதுடைய ஆடை தொழிலாளி சம்பவத்தில் பங்கு வாய்ந்தார்.
  3. 03வாடகை மோட்டார் சைக்கிளில் செல்லும் போது படுகொலை நடந்தது.
  4. 04கொலைக்கு பின்னால் குற்றவாளிகள் இருந்தனர்.
  5. 05பொலிஸார் சந்தேகநபர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
  6. 06காலணிகள் மற்றும் பணத்தாள் சம்பவ இடத்தில் கண்டெடுக்க பட்டது.
  7. 07திடீர் மரண விசாரணை அதிகாரி மரணத்திற்கான காரணம் ஒப்புக்கொள்கிறது.

ஹோமாகம, கலகாஹேன பகுதியிலுள்ள கால்வாயொன்றில் இருந்து நேற்று வியாழக்கிழமை (16) அதிகாலை மீட்கப்பட்ட நபர் ஒருவரின் சடலம் மீதான பிரேத பரிசோதனையில் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.

இவ்வாறு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டவர் ஹோமாகம, பிட்டிபன பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் ஆவார்.

இவர் ஆடைத் தொழிற்சாலையொன்றில் நிரந்தர ஊழியராகப் பணிபுரிந்து கொண்டே, பகுதி நேரமாக ஆன்லைன் ஆப் மூலமான வாடகை மோட்டார் சைக்கிள் ஓட்டுநராகவும் கடமையாற்றி வந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

கடந்த 15ஆம் திகதி இரவு 7.00 மணியளவில் வாடகை சவாரி ஒன்றிற்காக நபர் ஒருவரைத் தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் செல்வதற்காக இவர் வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

குறித்த கால்வாய்க்கு அருகில் அமைந்துள்ள ஏலக் காணியொன்றினுள் வைத்தே இந்தத் துரதிர்ஷ்டவசமான கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். கொலையாளிகள் அந்த நபரைத் தடுத்து நிறுத்திக் கொடூரமாகக் கொலை செய்ததுடன், அவரிடமிருந்த மோட்டார் சைக்கிள், தங்க மாலை, கைத்தொலைபேசி மற்றும் பணப்பை ஆகியவற்றைத் திருடிக்கொண்டு தப்பியோடியுள்ளனர்.

குற்றம் நடந்ததாகக் கருதப்படும் காணியை சோதனையிட்ட பொலிஸார், அங்கிருந்து உயிரிழந்த நபர் அணிந்திருந்ததாகக் கருதப்படும் ஒரு ஜோடி காலணிகளையும், ஒரு 20 ரூபா பணத்தாளையும் கண்டெடுத்துள்ளனர்.

நீதவான் விசாரணைகளைத் தொடர்ந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், கழுத்துப் பகுதி அறுக்கப்பட்டமையினாலேயே இந்த மரணம் சம்பவித்துள்ளது என திடீர் மரண விசாரணை அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.

இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரையில் அடையாளம் காணப்படாத நிலையில், சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளில் ஹோமாகம பொலிஸார் ஈடுபட்டுவருகின்றனர்.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/253448
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
கொலைஹோமாகமபிரேத பரிசோதனைபொலிஸார்தூர்வாரி
BestWeb.lk Top Web 2026 June Qualified