Breaking
யக்கலவில் கைக்குண்டுகள், தோட்டாக்கள், சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் கைது!
WorldVirakesari

யக்கலவில் கைக்குண்டுகள், தோட்டாக்கள், சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் கைது!

July 17, 2026·1 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01யக்கல பகுதியில் 42 வயதுப்Person ஒருவர்க் கைதானார்.
  2. 02இரவில் விசேட சுற்றிவளைப்பின் போது கைதினார்.
  3. 03கைது செய்யப்பட்டவர் சிகரெட்டுகளுடன் பிடிக்கப்பட்டார்.
  4. 04மொத்தமாக 2 கைக்குண்டுகள் மற்றும் 32 பிஸ்டல் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன.
  5. 05மேலும், 34,000 சட்டவிரோத சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டன.
  6. 06பொலிஸார் மேலதிக விசாரணை செய்து வருகிறார்கள்.

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 2 கைக்குண்டுகள் மற்றும் பல்வேறு வகையான தோட்டாக்கள் உள்ளிட்ட பெருமளவிலான ஆயுதங்கள் மற்றும் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் யக்கல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் நேற்று (16) வியாழக்கிழமை இரவில் யக்கல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இந்த ஆயுதக் குவியல் கைப்பற்றப்பட்டுள்ளது.

இச்சுற்றிவளைப்பின் போது, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 02 கைக்குண்டுகள், 32 பிஸ்டல் தோட்டாக்கள், எச்-16 (M-16) ரக துப்பாக்கி மற்றும் அதன் 11 தோட்டாக்கள், 06 ரிவோல்வர் தோட்டாக்கள் மற்றும் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கடத்தி வரப்பட்ட 34,000 சிகரெட்டுகள் என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸார் விடுத்துள்ள அறிக்கையின்படி, கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 42 வயதுடையவர் எனவும், அவர் ராகம பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

மேலும், இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/253443
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
கைதுயக்கலசிகரெட்ஆயுதங்கள்ராஜாங்கம்
BestWeb.lk Top Web 2026 June Qualified