Breaking
சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionLeading clothing retailer owner remanded over Customs probeProtecting street animals a shared responsibility, says Prime MinisterKushbu’s ‘Maharanis – Tinsel Queens’ to showcase Sri Lanka’s culture and scenic beautyMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri Lankaசந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionLeading clothing retailer owner remanded over Customs probeProtecting street animals a shared responsibility, says Prime MinisterKushbu’s ‘Maharanis – Tinsel Queens’ to showcase Sri Lanka’s culture and scenic beautyMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri Lanka
மகும்புர போக்குவரத்து மத்திய நிலையத்தில் திடீர் சோதனை : போதைப்பொருள் பயன்படுத்திய நான்கு பஸ் சாரதிகள் சிக்கினர்!
WorldVirakesari

மகும்புர போக்குவரத்து மத்திய நிலையத்தில் திடீர் சோதனை : போதைப்பொருள் பயன்படுத்திய நான்கு பஸ் சாரதிகள் சிக்கினர்!

July 17, 2026·1 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01கொட்டாவையில் போதைப்பொருள் பரிசோதனை நடத்தப்பட்டது.
  2. 02நான்கு பஸ்சாரதிகள் போதைப்பொருட்களைப் பயன்பாட்டில் உறுதி செய்யப்பட்டது.
  3. 03இதற்காக 150 பஸ்சாரதிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
  4. 04போக்குவரத்து அமைச்சு கடுமையான சட்ட நடவடிக்கைகளை அறிவித்தது.
  5. 05சாரதிகளுக்கு மேலிட்டு தண்டனைகள் வழங்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.
  6. 06இந்த திட்டம் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்யும் பொருட்டு உள்ளது.

கொட்டாவை, மகும்புர பல்லின போக்குவரத்து மத்திய நிலையத்தில் வியாழக்கிழமை (16) முன்னெடுக்கப்பட்ட திடீர் போதைப்பொருள் பரிசோதனை நடவடிக்கையின் போது, பொதுப் போக்குவரத்து பஸ் சாரதிகள் நால்வர் போதைப்பொருட்களைப் பயன்படுத்தியிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சின் வீதிப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இந்த விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைவர், வைத்தியர் என்.ஏ. அபேசேகர தலைமையிலான குழுவினர், குறித்த நிறுவனத்தின் நடமாடும் ஆய்வக பஸ் வண்டியினுள் வைத்து இப் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

பொதுப் போக்குவரத்தில் ஒழுக்கமான மற்றும் போதைப்பொருள் அற்ற பணியாளர்களை உருவாக்குவதற்காக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.

நேற்று காலை நடத்தப்பட்ட இப்பரிசோதனையின் போது, சுமார் 150 பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

கடுமையான சட்ட நடவடிக்கைசாரதிகளின் ஒழுக்கத்தை மேம்படுத்தவும், வீதி விபத்துக்களைக் குறைக்கவும் இவ்வாறான விசேட செயற்திட்டங்கள் அத்தியாவசியமானவை என போக்குவரத்து அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், போதைப்பொருள் பயன்படுத்தியதாக அடையாளம் காணப்பட்ட சாரதிகளுக்கு எதிராக நிறுவன ரீதியான ஒழுக்காற்று விதிகளின் கீழ் அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என்றும், பொது சட்டத்தின் கீழ் நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சு எச்சரித்துள்ளது.

போக்குவரத்து அமைச்சு, இலங்கை பொலிஸார் மற்றும் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் ஆகியன இணைந்து முன்னெடுக்கும் இத்திட்டம், பாதுகாப்பான மற்றும் நம்பகமான பொதுப் போக்குவரத்து சேவையை நாடளாவிய ரீதியில் உறுதி செய்வதற்காக மேலும் விரிவுபடுத்தப்படவுள்ளது.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/253469
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
போதைப்பொருள்போக்குவரத்துசோதனைசாரதிகள்
BestWeb.lk Top Web 2026 June Qualified