Breaking
சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionLeading clothing retailer owner remanded over Customs probeProtecting street animals a shared responsibility, says Prime MinisterKushbu’s ‘Maharanis – Tinsel Queens’ to showcase Sri Lanka’s culture and scenic beautyMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri Lankaசந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionLeading clothing retailer owner remanded over Customs probeProtecting street animals a shared responsibility, says Prime MinisterKushbu’s ‘Maharanis – Tinsel Queens’ to showcase Sri Lanka’s culture and scenic beautyMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri Lanka
நேர்மையாக இருந்தால் நிச்சயம் விமர்சனங்கள் வரும் கிளிநொச்சி மாவட்டச் செயலருக்கு நடந்தது இதுதான் - வடக்குமாகாண ஆளுநர் வேதநாயகன்
WorldVirakesari

நேர்மையாக இருந்தால் நிச்சயம் விமர்சனங்கள் வரும் கிளிநொச்சி மாவட்டச் செயலருக்கு நடந்தது இதுதான் - வடக்குமாகாண ஆளுநர் வேதநாயகன்

July 17, 2026·3 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01வடக்கு ஆளுநர் சவால்களின் எதிர்காலத்தை விவரித்தார்.
  2. 02புதிய நியமனங்கள் வழங்கும் நிகழ்வு நடந்தது.
  3. 03நேர்மையான பணியாற்றல் முக்கியம் என கூறினார்.
  4. 04சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரவுவதற்கு இடமளிக்க கூடாது.
  5. 05மக்கள் விரைவான மற்றும் தரமான சேவையை எதிர்பார்க்கின்றனர்.
  6. 06இருப்பின் இடமாற்றங்கள் ஏற்க மறுப்பு பெருக்கமாகின்றது.
  7. 07சிறந்த தலைமைத்துவத்துடன் பணியாற்றுங்கள்.

நேர்மையாக இருந்தால் நிச்சயம் விமர்சனங்கள் வரும். மாற்றங்களைச் செய்ய முற்பட்டால் சவால்கள் வரும். கிளிநொச்சி மாவட்டச் செயலருக்கு எதிராக வியாழக்கிழமை (16) மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நடந்ததும் அதுதான்' என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண முகாமைத்துவ சேவையின் அதிசிறப்புத் தரத்துக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான பதவியுயர்வு நியமனங்கள் வழங்கும் நிகழ்வும், புதிதாகச் சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட்ட வருமான வரிப் பரிசோதகர்கள் மற்றும் நூலகர்களுக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வும் ஆளுநர் செயலகத்தில் வெள்ளிக்கிழமை (17) நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு புதிய நியமனங்களை வழங்கி வைத்து உரையாற்றும் போதே ஆளுநர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

புதிதாக நியமனம் பெறுபவர்கள் மற்றும் ஏற்கனவே சேவையில் உள்ளவர்களில் பதவியுயர்வு பெறுபவர்கள் என இரண்டு தரப்பினர் இங்குள்ளீர்கள். கடந்த காலங்களில் பணியாற்றிய அதிகாரிகள் இப்போது செயலாளர்களாகவும், ஆணையாளர்களாகவும் இங்கு வீற்றிருக்கிறார்கள். அன்றைய காலங்களில் அவர்கள் பணியாற்றிய போது பல்வேறு அரசியல் தலையீடுகளும் அழுத்தங்களும் இருந்தன. ஆனால், இன்று அவ்வாறான நிலைமை இல்லை. நீங்கள் மிகவும் சுதந்திரமாகப் பணியாற்றலாம்; ஆனால், நேர்மையாகப் பணியாற்ற வேண்டும்.

நீங்கள் நேர்மையாகப் பணியாற்றினால் நிச்சயமாக உங்கள் மீது அவதூறுகளைப் பரப்புவார்கள். உங்களைப் பற்றி சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படும். பல்வேறு சவால்களை நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

மக்கள் உங்களிடமிருந்து விரைவான, நட்பான, மற்றும் தரமான சேவையையே எதிர்பார்க்கின்றார்கள். எனவே, நீங்கள் நேரிய சிந்தனையுடன் விடயங்களை அணுக வேண்டும். உங்களை நாடி வருகின்ற ஒரு பொதுமகனுக்கு எவ்வாறு சேவையைச் செய்து கொடுக்கலாம் என்று சிந்திக்க வேண்டுமே தவிர, அவரை எப்படித் தட்டிக் கழிக்கலாம் என ஒருபோதும் நினைக்கக் கூடாது. பொதுமக்களுக்குச் சேவை செய்வதற்காகவே உங்களுக்கு இந்தப் பதவிகள் வழங்கப்படுகின்றன என்பதைப் பதவிக் கதிரையில் அமர்ந்ததும் சிலர் மறந்து விடுகின்றார்கள்; அந்த நிலைமை மாற வேண்டும்.

முன்னைய காலங்களில் அரச நியமனக் கடிதங்களில் 'இலங்கையின் எப்பாகத்திலும் கடமையாற்ற வேண்டும்' எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். இப்போது 'வடக்கு மாகாணத்தில் எப்பாகத்திலும் கடமையாற்ற வேண்டும்' என நியமனக் கடிதங்களில் நிபந்தனை வழங்கப்படுகின்றது. ஆனால், இடமாற்றங்கள் வழங்கப்பட்டால் அதனை ஏற்க மறுக்கும் போக்கு தற்போது அதிகரித்து வருகின்றது. இது அரச சேவைக்குப் பொருத்தமற்றதொரு விடயமாகும்.

நீங்கள் சிறந்த தலைமைத்துவப் பண்புடன் பணியாற்றுங்கள். அந்தத் தலைமைத்துவப் பண்பு உங்களிடம் இருக்குமாக இருந்தால், உங்களுக்கு வழங்கப்பட்ட பணியிடங்களிலிருந்து உங்களை மாற்ற வேண்டும் என்ற எண்ணமே எமக்கு வராது. மக்கள் விரும்புகின்ற சிறந்த சேவையை நீங்கள் அர்ப்பணிப்புடன் வழங்க வேண்டும் என நான் எதிர்பார்க்கின்றேன் என்றார்.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/253533
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
வடக்குநியமனம்சேவைஆளுநர்நேர்மை
BestWeb.lk Top Web 2026 June Qualified