Breaking
சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionLeading clothing retailer owner remanded over Customs probeProtecting street animals a shared responsibility, says Prime MinisterKushbu’s ‘Maharanis – Tinsel Queens’ to showcase Sri Lanka’s culture and scenic beautyMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri Lankaசந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionLeading clothing retailer owner remanded over Customs probeProtecting street animals a shared responsibility, says Prime MinisterKushbu’s ‘Maharanis – Tinsel Queens’ to showcase Sri Lanka’s culture and scenic beautyMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri Lanka
11 மாவட்டங்களில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்
ScienceNewsfirst

11 மாவட்டங்களில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

July 16, 2026·2 min read
Photo: Newsfirst
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 0111 மாவட்டங்களில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
  2. 0263 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் திட்டம் முன்னெடுக்கப்படும்.
  3. 03இந்த வேலைத்திட்டம் 7 நாட்கள் கிராம உத்தியோத்தர் மட்டத்தில் நடைபெறும்.
  4. 0410 குழுக்கள் மருத்துவ, பொலிசார் மற்றும் இராணுவ உறுப்பினர்களால் செயல்படுவார்கள்.
  5. 05நோயாளர்கள் மற்றும் மரண எண்ணிக்கைகள் அதிகரிக்கின்றன.
  6. 0671,235 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  7. 0749 மரணங்கள் பதிவாகியுள்ளன.
  8. 08175 சுகாதார பிரிவுகள் டெங்கு அபாய வலயமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

Colombo (News 1st) 11 மாவட்டங்களில் இன்று (16) முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த 11 மாவட்டங்களின் 63 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அதன் பதில் பணிப்பாளர் கபில கன்னங்கர தெரிவித்தார்.

இந்த வேலைத்திட்டம் 07 நாட்களுக்கு கிராம உத்தியோத்தர் மட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.

சுகாதார பிரிவு உத்தியோகத்தர், பொலிஸ் உத்தியோகத்தர், இராணுவ உறுப்பினர் மற்றும் சுகாதார துறைகளைச் சேர்ந்த உறுப்பினர்களை கொண்ட 10 குழுக்கள் இந்த வேலைத்திட்டதில் ஈடுபடுவதாக அவர் குறிப்பிட்டார்.

நாளாந்தம் நோயாளர்கள் பதிவாகின்றமை மற்றும் நுளம்புக்கடி ஆகியவற்றைக் குறைப்பதற்காக காலை மற்றும் மாலை வேளைகளில் புகை மூட்டும் பணிகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் பதில் பணிப்பாளர் கபில கன்னங்கர தெரிவித்தார்.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 71,235 ஆக பதிவாகியுள்ளது.

அத்துடன் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளதாக டெங்கு ஒழிப்புப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் 175 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் தொடர்ந்தும் டெங்கு அதிக அபாய வலயங்களாக பெயரிடப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

Continue Reading
Read the full story on Newsfirst.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Newsfirst
https://tamil.newsfirst.lk/2026/07/16/11-மாவட்டங்களில்-விச
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Newsfirst
டெங்குசுகாதாரம்நாட்டின் நலன்பாதிப்பு
BestWeb.lk Top Web 2026 June Qualified