பணச் சுத்திகரிப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்ஸி பொரஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்ட மாஅதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் முழுமையான விசாரணை எதிர்வரும் ஆகஸ்ட் 31ஆம் திகதி இடம்பெறும் என கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அவர் இந்த உத்தரவினை பிறப்பித்தார்.
