Breaking
சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionLeading clothing retailer owner remanded over Customs probeProtecting street animals a shared responsibility, says Prime MinisterKushbu’s ‘Maharanis – Tinsel Queens’ to showcase Sri Lanka’s culture and scenic beautyMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri Lankaசந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionLeading clothing retailer owner remanded over Customs probeProtecting street animals a shared responsibility, says Prime MinisterKushbu’s ‘Maharanis – Tinsel Queens’ to showcase Sri Lanka’s culture and scenic beautyMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri Lanka
பாங்கொக்கிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட மலர்ச் செடிகள் கட்டுநாயக்கவில் கைப்பற்றல்: இலங்கைப் பெண் கைது!
WorldVirakesari

பாங்கொக்கிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட மலர்ச் செடிகள் கட்டுநாயக்கவில் கைப்பற்றல்: இலங்கைப் பெண் கைது!

July 16, 2026·2 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01இலங்கை பெண் ஒருவர் பாங்கொக்கில் இருந்து மலர்ச் செடிகளை சட்டவிரோதமாக கடத்தினார்.
  2. 02சட்டவிரோதமாக வைத்து கடத்தப்பட்ட செடிகள், விமான நிலையத்தில் பிடிக்கப்பட்டன.
  3. 03அநேகர் சட்ட விதிகள் ஏற்ப, இறக்குமதிக்கு அனுமதி கடிதம் தேவை.
  4. 04சுங்க அதிகாரிகள் அவ்வாறு செய்யும் நடவடிக்கைகளை அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
  5. 05மருத்துவம் மற்றும் பூச்சிகள் எதுவும் இல்லை என்பதற்கான சான்றிதழ் அனுப்பவும் வேண்டும்.
  6. 06அனைத்து செடிகளும் அரசுடைமையாக்கப்பட்டன.
  7. 07பெண்மணிக்கு நிதிய அபராதம் விதிக்கப்பட்டது.

தாய்லாந்து, பாங்கொக் நகரிலிருந்து பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைத்துச் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குக் கடத்தி வரப்பட்ட பெருமளவிலான மலர்ச் செடிகளுடன் இலங்கை பெண் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாங்கொக்கிலிருந்து ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான UL 403 என்ற விமானம் மூலம் அப்பயணி கட்டுநாயக்கவை வந்தடைந்தார்.

விமான நிலையத்தின் பசுமைப் பிரிவு வழியாக அவர் வெளியேற முயன்ற போது, விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் இலங்கை சுங்கப் பிரிவின் பல்லுயிர், கலாசார மற்றும் தேசிய பாரம்பரிய பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் இணைந்து அவரை மறித்துச் சோதனை மேற்கொண்டனர். இதன்போது அவரது பைகளிலிருந்து மலர்ச் செடிகள் கண்டெடுக்கப்பட்டன.

நாட்டின் 1993 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க தாவரப் பாதுகாப்புச் சட்டத்தின் படி, தாவரங்களையோ அல்லது அவற்றின் பாகங்களையோ நாட்ககுள் இறக்குமதி செய்வதற்கு கடுமையான விதிமுறைகள் உள்ளன.

விவசாயத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் கட்டாயம் இருக்க வேண்டும்.

ஏற்றுமதி செய்யும் நாட்டிலிருந்து (இங்கு தாய்லாந்து), அந்தத் தாவரங்களில் பூச்சிகள் மற்றும் நோய்க்கிருமிகள் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் 'தாவர தனிமைப்படுத்தல் சான்றிதழ்' சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இந்த விதிமுறைகளை மீறிச் செய்யப்படும் எந்தவொரு இறக்குமதியும் சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் சட்டவிரோதமான செயலாகவும் தண்டனைக்குரிய குற்றமாகவும் கருதப்படும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சுங்கப் பிரிவினரின் ஆரம்பகட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, கடத்தி வரப்பட்ட அனைத்து மலர்ச் செடிகளும் அரசுடைமையாக்கப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட பெண் பயணிக்கு நிதிய அபராதமும் விதிக்கப்பட்டது.

கைப்பற்றப்பட்ட செடிகள் அனைத்தும் அடுத்தகட்ட அழிப்பு நடவடிக்கைகளுக்காக விமான நிலைய தாவர தனிமைப்படுத்தல் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/253339
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
இலங்கைமலர்ச்சிசுங்கம்அரசுநிதியஅபராதம்
BestWeb.lk Top Web 2026 June Qualified