Breaking
சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionLeading clothing retailer owner remanded over Customs probeProtecting street animals a shared responsibility, says Prime MinisterKushbu’s ‘Maharanis – Tinsel Queens’ to showcase Sri Lanka’s culture and scenic beautyMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri Lankaசந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionLeading clothing retailer owner remanded over Customs probeProtecting street animals a shared responsibility, says Prime MinisterKushbu’s ‘Maharanis – Tinsel Queens’ to showcase Sri Lanka’s culture and scenic beautyMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri Lanka
பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல்; 3 பொலிஸார் பலி, 34 பேர் காயம்!
WorldVirakesari

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல்; 3 பொலிஸார் பலி, 34 பேர் காயம்!

July 16, 2026·2 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01பாகிஸ்தானில் வெகுதாங்கிய தாக்குதல்களில் 3 பொலிஸார் உயிரிழந்தனர்.
  2. 02இரு தாக்குதல்கள் கைபர் பக்துன்க்வா பகுதியில் நடைபெற்றன.
  3. 03பயங்கரவாதிகள் பொலிஸ் வாகனங்களுக்கு கைக்குண்டுகள் வீசி தாக்கினர்.
  4. 04மேலும் ஒருவர் போலீசாரை மிரியன் பொலிஸ் நிலையத்தில் தாக்கினர்.
  5. 05காயமடைந்த 34 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
  6. 06பாதுகாப்புப் படையினரால் தேடுதல் நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.
  7. 07கடந்த ஏப்ரலிலும்similar தாக்குதல் நடந்தது.

பாகிஸ்தானின் பதற்றம் நிறைந்த கைபர் பக்துன்க்வா மாகாணத்தில், பொலிஸ் வாகன அணிவகுப்பு மற்றும் பொலிஸ் நிலையம் ஆகியவற்றைக் குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய இரு வேறு தாக்குதல்களில் மூன்று பொலிஸார் உயிரிழந்துள்ளதுடன், 34 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

லோயர் தீர் மாவட்டத்தின் ஹைதர் பகுதியில் உள்ள 'லாடம் டாப்' அருகே பொலிஸ் வாகன அணிவகுப்பு சென்றுகொண்டிருந்த போது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகள் முதலில் பொலிஸ் வாகனங்கள் மீது கைக்குண்டுகளை வீசியதுடன், பின்னர் தானியங்கி ஆயுதங்களால் சரமாரியாகச் சுட்டுள்ளனர். இத்தாக்குதலின் போது பொலிஸாரின் இரு வாகனங்களுக்கும் பயங்கரவாதிகள் தீ வைத்துள்ளனர்.

இந்த கொடூரத் தாக்குதலில் 3 பொலிஸார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மற்றும் 19 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதி தற்போது பாதுகாப்புப் படையினரால் முற்றுகையிடப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மற்றுமொரு சம்பவத்தில், பன்னு மாவட்டத்தில் உள்ள மிரியன் பொலிஸ் நிலையத்தைத் தகர்க்க முயன்ற பயங்கரவாதிகளின் தற்கொலைத் தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனம் ஒன்றின் மூலம் பயங்கரவாதிகள் பொலிஸ் நிலையத்திற்குள் புகுந்து மோத முயன்றனர். எனினும், அங்கிருந்த பொலிஸாரும் பாதுகாப்புப் படையினரும் துரிதமாகச் செயல்பட்டு, அந்த வாகனம் பொலிஸ் நிலைய எல்லைக்குள் நுழைவதற்கு முன்பாகவே துப்பாக்கிச் சூடு நடத்தி அதனை நடுவழியிலேயே வெடிக்கச் செய்து அழித்துள்ளனர்.

காரை வெடிக்கச் செய்த பின்னர், பொலிஸ் நிலையத்திற்குள் நுழைய முயன்ற 4 பயங்கரவாதிகளும் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த மோதலின் போது 15 பொலிஸார் காயமடைந்துள்ளனர். அவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக பெஷாவர் மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என பன்னு மாவட்ட பொலிஸ் அதிகாரி முகமது புர்கான் பிலால் உறுதிப்படுத்தியுள்ளார்.

கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளன. இதற்கு முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதத்திலும் இதே பன்னு மாவட்டத்தின் டொமேல் பொலிஸ் நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தற்கொலை கார் குண்டுத் தாக்குதலில் 5 பொதுமக்கள் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/253330
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
பாகிஸ்தான்பொருளாதாரம்பொலிஸ்பயங்கரவாதம்காயங்கள்
BestWeb.lk Top Web 2026 June Qualified