தெற்கு அதிவேக வீதியின் அபரெக்க இடைமாறல் பகுதி ஊடாக மோட்டார் காரொன்றில் 'ஐஸ்' போதைப்பொருளைக் கடத்த முயன்ற இரு சந்தேகநபர்கள் அதிவேக வீதிப் பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து 2 கிலோகிராம் 554 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேகநபர்கள், அபரெக்க நுழைவாயில் ஊடாக அதிவேக வீதியில் கொழும்பு திசையை நோக்கி செல்வதற்கு முற்பட்டுள்ளனர்.
இதன்போது, அங்கு கடமையிலிருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் மோட்டார் சைக்கிளை மறித்து சோதனையிட்ட போதே இந்த போதைப்பொருள் கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து, போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளுடன் கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும், மேலதிக விசாரணைகளுக்காக திஹகொட பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பொரளை பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 32 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் திஹகொட பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
