Breaking
சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionLeading clothing retailer owner remanded over Customs probeProtecting street animals a shared responsibility, says Prime MinisterKushbu’s ‘Maharanis – Tinsel Queens’ to showcase Sri Lanka’s culture and scenic beautyMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri Lankaசந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionLeading clothing retailer owner remanded over Customs probeProtecting street animals a shared responsibility, says Prime MinisterKushbu’s ‘Maharanis – Tinsel Queens’ to showcase Sri Lanka’s culture and scenic beautyMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri Lanka
கொழும்பில் வாகனத் தரிப்பிடக் கட்டணம் நிறுத்தப்படவில்லை – கொழும்பு மாநகர சபை
WorldVirakesari

கொழும்பில் வாகனத் தரிப்பிடக் கட்டணம் நிறுத்தப்படவில்லை – கொழும்பு மாநகர சபை

July 16, 2026·3 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01கொழும்பு மாநகர சபை வாகனத் தரிப்பிடக் கட்டணங்கள் இடைநிறுத்தப்பட்டு என கூறுகிற செய்திகள் போலியானவை.
  2. 02பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவும் வீடியோக்கள் போலிச் செய்திகள் என கூறப்பட்டுள்ளது.
  3. 03தற்காலிகமாக கொழும்பு மாநகர சபை கட்டண வசூலை நிறுத்தியதாக சொல்லப்படுகிறது.
  4. 04அவற்றின் காரணமாக, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காணப்பட்டது போக்குவரத்து நெரிசல்.
  5. 05மார்ச் 23-ஆம் தேதி காலை 6.00 மணி முதல் கட்டண வசூல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.
  6. 06வாகன ஓட்டுநர்கள் கூட்டிடம் கட்டணங்களை செலுத்துமாறு கேட்டுள்ளனர்.

கொழும்பு மாநகர எல்லைக்குள் வாகனத் தரிப்பிட கட்டணங்களை வசூலிக்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் போலியானவை என கொழும்பு மாநகர சபை தெளிவுபடுத்தியுள்ளது.

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வாகனத் தரிப்பிடக் கட்டணங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பரப்பப்படும் வீடியோக்கள் போலிச் செய்திகள் என மாநகர சபை சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போது பரவி வரும் வீடியோவானது, கடந்த மார்ச் 18, அன்று எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காணப்பட்ட நீண்ட வரிசைகள் காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, வாகனத் தரிப்பிடக் கட்டண வசூலிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது எடுக்கப்பட்ட பழைய வீடியோவாகும் என மாநகர சபை விளக்கியுள்ளது.

எனினும், அரசாங்கத்தினால் கியூஆர் குறியீடு அடிப்படையிலான எரிபொருள் விநியோக முறை மற்றும் வாகன இலக்கத் தகடுகளின் ஒற்றை-இரட்டை இலக்க முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து எரிபொருள் வரிசைகள் குறைந்தன. இதனையடுத்து, கொழும்பு மாநகர சபையின் நிதிக்குழுவின் ஒப்புதலுடன், கடந்த மார்ச் 23, ஆம் திகதி காலை 6.00 மணி முதல் வழமையான வாகனத் தரிப்பிட நிர்வாகமும் கட்டண வசூலிப்பும் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

எனவே, கொழும்பு நகருக்குள் வாகனத் தரிப்பிட வசதிகளைப் பயன்படுத்தும் அனைத்து வாகன ஓட்டுநர்களும் தங்களுக்குரிய தரிப்பிடக் கட்டணங்களை தொடர்ந்து செலுத்துமாறு கொழும்பு மாநகர சபை கேட்டுக்கொண்டுள்ளது.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/253321
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
கொழும்புவாகனத்தரிப்பிடசமூகவலைதளம்போலிச் செய்திஎரிபொருள்
BestWeb.lk Top Web 2026 June Qualified