Breaking
சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionLeading clothing retailer owner remanded over Customs probeProtecting street animals a shared responsibility, says Prime MinisterKushbu’s ‘Maharanis – Tinsel Queens’ to showcase Sri Lanka’s culture and scenic beautyMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri Lankaசந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionLeading clothing retailer owner remanded over Customs probeProtecting street animals a shared responsibility, says Prime MinisterKushbu’s ‘Maharanis – Tinsel Queens’ to showcase Sri Lanka’s culture and scenic beautyMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri Lanka
கார் தீப்பற்றிய சம்பவம் : 8 வயது சிறுவன் மீது பரவிய சமூக ஊடக வதந்திக்கு பொலிஸார் விளக்கம்!
WorldVirakesari

கார் தீப்பற்றிய சம்பவம் : 8 வயது சிறுவன் மீது பரவிய சமூக ஊடக வதந்திக்கு பொலிஸார் விளக்கம்!

July 16, 2026·2 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01குருநாகலில் பதியப்பட்ட கார் தீப்பற்றியது சம்பவம் தொடர்பான விசாரணை தொடங்கியது.
  2. 028 வயது சிறுவன் காரைச் செயலிழக்க வைத்ததாக கூறப்படுகிறது.
  3. 03பொலிஸாரின் அறிக்கையில் உள்ள வீடியோ ஆதாரமற்றது என தெரிவிக்கப்பட்டது.
  4. 04காரின் மதிப்பு 1.4 கோடி ரூபா எனும் தகவல் உள்ளது.
  5. 05தீவைத்த காரணம் பற்றிய நேரடி சாட்சியங்கள் இல்லையென பொலிஸார் தெரிவித்தனர்.
  6. 06சம்பவம் நீதிமன்றத்தில் அறிக்கையிடப்பட்டுள்ளது.
  7. 07அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் விசாரணைக்கான நிபுணத்துவ ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

குருநாகலில் உள்ள பாடசாலை ஒன்றின் வளாகத்தில் சொகுசு கார் ஒன்று தீப்பற்றி எரிந்த சம்பவம் தொடர்பாக, 8 வயது சிறுவன் ஒருவன் காரைக் கொளுத்தியதாகச் சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோ ஆதாரமற்றது என பொலிஸார் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவின் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில்,

கடந்த ஜூலை 3 ஆம் திகதி குருநாகல் பகுதியில் உள்ள முன்னணி பாடசாலை ஒன்றின் வளாகத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 1.4 கோடி ரூபா பெறுமதியான கார் ஒன்று திடீரெனத் தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது.

அந்தப் பாடசாலையில் கல்வி பயிலும் 8 வயது சிறுவனே இந்தத் தீ வைப்புக்குக் காரணம் என குருநாகல் பொலிஸாரிடம் முறைப்பாடு ஒன்று அளிக்கப்பட்டதை அடுத்து, இது குறித்துப் பொலிஸார் விசாரணையை ஆரம்பித்தனர்.

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் காணொளியில் இருக்கும் சிறுவன், அதே பாடசாலையில் கல்வி கற்கும் 8 வயது மாணவன் என்பதும், விபத்து நடந்த நேரத்தில் அவன் அந்த காரின் அருகே நடந்து சென்றுகொண்டிருந்தான் என்பதும் உண்மைதான் எனப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

எனினும், அந்தச் சிறுவன் காரைத் தீயிட்டுக் கொளுத்தினான் என்பதற்கான எந்தவொரு நேரடிச் சாட்சியங்களோ அல்லது தடய அறிவியல் ஆதாரங்களோ இதுவரை கண்டறியப்படவில்லை எனப் பொலிஸார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான விபரங்கள் ஏற்கனவே நீதிமன்றத்தில் அறிக்கை செய்யப்பட்டுள்ளன. கார் தீப்பற்றியதற்கான உண்மையான காரணத்தைக் கண்டறியும் நோக்கில், அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளரின் நிபுணத்துவ ஆய்வுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுடன், குருநாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/253332
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
குருநாகல்பொலிஸ்சிறுவன்கார்தீ
BestWeb.lk Top Web 2026 June Qualified