Breaking
சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionLeading clothing retailer owner remanded over Customs probeProtecting street animals a shared responsibility, says Prime MinisterKushbu’s ‘Maharanis – Tinsel Queens’ to showcase Sri Lanka’s culture and scenic beautyMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri Lankaசந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionLeading clothing retailer owner remanded over Customs probeProtecting street animals a shared responsibility, says Prime MinisterKushbu’s ‘Maharanis – Tinsel Queens’ to showcase Sri Lanka’s culture and scenic beautyMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri Lanka
கட்டுநாயக்கவில் பொலிஸ் உத்தியோகத்தரை சுட்டுவிட்டுத் தப்பியோடிய சந்தேகநபர் கைது
WorldVirakesari

கட்டுநாயக்கவில் பொலிஸ் உத்தியோகத்தரை சுட்டுவிட்டுத் தப்பியோடிய சந்தேகநபர் கைது

July 16, 2026·2 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
  2. 0231 கிராம் 'ஐஸ்' போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
  3. 03கொள்ளையடிக்கப்பட்ட துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.
  4. 04சந்தேகநபர் 41 வயது மற்றும் திவுலபிட்டியில் வசிக்கிறார்.
  5. 05இச் சம்பவத்தில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.
  6. 06மற்றொரு சந்தேகநபரை கைது செய்ய விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவில் பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கியைப் பறித்து பொலிஸ் அதிகாரி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பியோடிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

தப்பியோடிய சந்தேகநபரைக் கைது செய்வதற்காக பல பொலிஸ் குழுக்கள் விசேட நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தன. இதற்கமைய, நீர்கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் திவுலபிட்டிய பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்படும் போது சந்தேகநபரிடமிருந்து 31 கிராம் 'ஐஸ்' போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன், அவரிடமிருந்து பொலிஸ் உத்தியோகத்தரிடம் கொள்ளையடிக்கப்பட்ட துப்பாக்கியும், அவர் தப்பிச் செல்லப் பயன்படுத்திய திருடப்பட்ட மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் திவுலபிட்டிய பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை சிவில் பாதுகாப்புப் படையின் கட்டுநாயக்க நகரப் பாதுகாப்புப் பிரிவில் இணைக்கப்பட்டு சிவில் பாதுகாப்புப் படையில் சேவை புரிந்த ஒருவர் என்பது ஆரம்பக்கட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்குள்ளான பொலிஸ் உத்தியோகத்தர் நீர்கொழும்பு வைத்தியசாலையிலும், சந்தேகநபரின் தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்த மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் மினுவாங்கொடை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/253334
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
பொலிஸ்கைதுபோராளிகள்விசாரணைபோதைப்பொருள்
BestWeb.lk Top Web 2026 June Qualified