Breaking
சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionLeading clothing retailer owner remanded over Customs probeProtecting street animals a shared responsibility, says Prime MinisterKushbu’s ‘Maharanis – Tinsel Queens’ to showcase Sri Lanka’s culture and scenic beautyMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri Lankaசந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionLeading clothing retailer owner remanded over Customs probeProtecting street animals a shared responsibility, says Prime MinisterKushbu’s ‘Maharanis – Tinsel Queens’ to showcase Sri Lanka’s culture and scenic beautyMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri Lanka
எல் நினோ தாக்கத்தால் வறட்சி அதிகரிக்கும் : நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தல்!
ClimateVirakesari

எல் நினோ தாக்கத்தால் வறட்சி அதிகரிக்கும் : நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தல்!

July 16, 2026·3 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01எல் நினோ காலநிலைக்கு ஏற்ப வறட்சி மற்றும் வெப்பநிலை அபாயம் உள்ளது.
  2. 02நீர்ப்பாசனத் திணைக்களம் நீர் சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவித்தது.
  3. 03நாட்டின் 80 தலைமை நீர்த்தேக்கங்களில் 48% நீர் சேமிப்பு மட்டுமே உள்ளது.
  4. 04நீர்மட்டத்தின் குறைவால் விவசாயிகளுக்கு சென்ற உருப்படியான திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
  5. 05வறண்ட வலயத்தில் பாரம்பரிய குளக் கட்டமைப்புகளை புனரமைக்க பணிகள் நாளிதழ் செயல் ஏற்பட்டுள்ளன.
  6. 06தானியங்கி கதவுகள் மற்றும் சென்சார்கள் புதிய முறைகளாக அறிமுகம் செய்யப்படுகின்றன.
  7. 07மாறுபட்ட பயிர்ச்செய்கைகள் மேற்கொள்வதற்கான விவசாயிகளுக்கான அறிவுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

எதிர்பார்க்கப்படும் எல் நினோ காலநிலை மாற்றத்தினால் நாட்டில் வறட்சி மற்றும் வெப்பநிலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், விவசாயப் பயன்பாட்டிற்கான நீரையும் குடிநீரையும் மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் அறிவித்துள்ளது.

நீர் முகாமத்துவம் மற்றும் தற்போதைய நிலைவரம் தொடர்பில் திணைக்களத்தின் நீர் முகாமத்துவப் பிரிவின் பணிப்பாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்துள்ளதாவது,

நாட்டின் 80 முக்கிய நீர்த்தேக்கங்களின் மொத்த நீர்ச் சேமிப்பு தற்போது சுமார் 48 சதவீதமாகக் குறைவடைந்துள்ளது. தற்போதுள்ள நீரானது தற்போதைய யால பயிர்ச்செய்கை பருவத்திற்குப் போதுமானதாக இருக்கும்.

எனினும், வறட்சியான காலநிலை நீடித்து, வரவிருக்கும் பெரும்போக பயிர்ச்செய்கை பருவத்தைப் பாதித்தால், முன்னுரிமை அடிப்படையில் தண்ணீரை விநியோகிப்பதற்காக விசேட நீர் முகாமைத்துவத் திட்டங்களை அதிகாரிகள் தயாரித்துள்ளனர்.

வறட்சியின் தாக்கத்தைக் குறைக்க நீர்ப்பாசனத் திணைக்களம் குறுகிய கால மற்றும் நீண்ட காலத் திட்டங்களை ஆரம்பித்துள்ளது.

அதன்படி, வறண்ட வலயத்தில் உள்ள பாரம்பரிய “எல்லங்கா குளக் கட்டமைப்புகளைபுனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உபரி நீரை வறட்சியால் பாதிக்கப்படும் பகுதிகளுக்குத் திருப்பிவிடுவதற்கான வடமத்திய மாகாண கால்வாய் திட்டப் பணிகள் தொடர்கின்றன.

நீர் வீணாவதைத் தடுக்க நீர்ப்பாசனக் கால்வாய்களுக்கான தானியங்கி கதவுக் கட்டமைப்புகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டத்தை உடனுக்குடன் கண்காணிக்கும் சென்சார்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.

களனி, களு, ஜின், நில்வளவை மற்றும் மல்வத்து உள்ளிட்ட முக்கிய ஆற்றுப்படுகைகளின் நீர்மட்டம் தற்போது சாதாரண மட்டத்திலேயே காணப்படுகிறது. உடனடி வெள்ளப் பெருக்கு அபாயம் எதுவும் இல்லை.

எனினும், வறண்ட காலநிலை தொடர்ந்தால் ஆறுகளின் நீர்மட்டம் மிக வேகமாக வீழ்ச்சியடையக்கூடும்.

விவசாயப் பணிகளை மிகவும் அவதானமாகத் திட்டமிடுமாறும், குறைந்த அளவு நீர் தேவைப்படும் மாற்றுப் பயிர்ச்செய்கைகளை மேற்கொள்ளுமாறும் விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பல மாவட்டங்களில் வெப்பச் சுட்டெண் ஏற்கனவே எச்சரிக்கையான நிலையை எட்டியுள்ளதால், பொதுமக்கள் அனைவரும் நீர் பாதுகாப்பு முயற்சிகளுக்கு முழுமையான ஆதரவை வழங்கி, பொறுப்புடன் தண்ணீரைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/253364
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
காலநிலைவறட்சிநிறுவனம்விவசாயம்நீர் மேலாண்மை
BestWeb.lk Top Web 2026 June Qualified