Breaking
சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionLeading clothing retailer owner remanded over Customs probeProtecting street animals a shared responsibility, says Prime MinisterKushbu’s ‘Maharanis – Tinsel Queens’ to showcase Sri Lanka’s culture and scenic beautyMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri Lankaசந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionLeading clothing retailer owner remanded over Customs probeProtecting street animals a shared responsibility, says Prime MinisterKushbu’s ‘Maharanis – Tinsel Queens’ to showcase Sri Lanka’s culture and scenic beautyMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri Lanka
பயணிகளை ஏற்றிச்செல்லும் ட்ரோன் செயற்றிட்டம்
TechnologyNewsfirst

பயணிகளை ஏற்றிச்செல்லும் ட்ரோன் செயற்றிட்டம்

July 14, 2026·1 min read
Photo: Newsfirst
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01அுள்ளியில் பயணிகளை ஏற்றும் ட்ரோன் செயற்திட்டம் தொடங்கப்படும்.
  2. 02தமிந்த ரம்புக்வெல்ல இதனை உறுதிப்படுத்தினார்.
  3. 03ஒரு ட்ரோனில் 06 பேர் பயணிக்க முடியும்.
  4. 04சீனா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து நாட்டில் இப்படியான திட்டங்கள் உள்ளன.
  5. 05இலங்கை மற்றும் சர்வதேச அமைப்புகளை இணைந்து செயற்படுத்த உள்ளனர்.
  6. 06தாய்லாந்து உவதிசை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
  7. 07இந்த திட்டத்தை 2023 இறுதிக்குள் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Colombo (News 1st) - நாட்டில் பயணிகளை ஏற்றிச்செல்லக்கூடிய ட்ரோன் செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.

முன்னோடி வேலைத்திட்டமாக இதனை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் தமிந்த ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.

ஒரு ட்ரோனில் 06 பேர் பயணிக்க முடியும் என அவர் தெரிவித்தார்.

இவ்வாறான வேலைத்திட்டம் தற்போது சீனா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை மற்றும் சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பு ஆகியன இணைந்து இந்த முன்னோடி திட்டத்தை செயற்படுத்த தீர்மானித்துள்ளதாக அவர் கூறினார்.

இந்த திட்டத்தை இவ்வருட இறுதிக்குள் செயற்படுத்த மேலும் பல உப திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சீனா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் சிவில் விமான சேவை போக்குவரத்து அதிகாரசபைகள் இந்த வேலைத்திட்டத்தை தற்போது ஆரம்பித்துள்ள நிலையில் இலங்கையில் முன்னெடுக்கப்படவுள்ள இந்த வேலைத்திட்டத்திற்கு தாய்லாந்து ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்காக இம்மாத இறுதியில் தாய்லாந்திலிருந்து குழுவொன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளதாகவும் ஆரம்பக்கட்ட கலந்துரையாடல்களின் பின்னர் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு ஆகியன இணைந்து இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் தமிந்த ரம்புக்வெல்ல மேலும் குறிப்பிட்டார்.

Continue Reading
Read the full story on Newsfirst.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Newsfirst
https://tamil.newsfirst.lk/2026/07/14/பயணிகளை-ஏற்றிச்செல்ல
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Newsfirst
ட்ரோன்சிவில் விமானப் போக்குவரத்துசீனாதாய்லாந்துசிங்கப்பூர்
BestWeb.lk Top Web 2026 June Qualified