Breaking
Sword, Live Grenades Discovered In Pallekele House During Police RaidMalaysian National Arrested At BIA With Cocaine Worth Rs. 90.8 Millionசந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionLeading clothing retailer owner remanded over Customs probeProtecting street animals a shared responsibility, says Prime MinisterKushbu’s ‘Maharanis – Tinsel Queens’ to showcase Sri Lanka’s culture and scenic beautySword, Live Grenades Discovered In Pallekele House During Police RaidMalaysian National Arrested At BIA With Cocaine Worth Rs. 90.8 Millionசந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionLeading clothing retailer owner remanded over Customs probeProtecting street animals a shared responsibility, says Prime MinisterKushbu’s ‘Maharanis – Tinsel Queens’ to showcase Sri Lanka’s culture and scenic beauty
பிலிப்பைன்ஸில் மண்சரிவுகளில் சிக்கி 15 பேர் உயிரிழப்பு!
WorldVirakesari

பிலிப்பைன்ஸில் மண்சரிவுகளில் சிக்கி 15 பேர் உயிரிழப்பு!

July 11, 2026·2 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01பிலிப்பைன்ஸ் பிராந்தியத்தில் 'பாவி' சூறாவலியில் 15 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
  2. 02'இண்டே' என அழைக்கப்படும் சூறாவளி நாட்டில் நுழைந்தது.
  3. 03மாலபடனில் 10 பேர் உயிரிழந்தனர், சிலர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
  4. 04கனமழை தொடர்வு மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்படுகிறார்கள்.
  5. 05மற்றொரு மண்சரிவில் 5 பேர் உயிரிழந்தனர்.
  6. 06அமெரிக்காவின் பசிபிக் தீவுகளை 'பாவி' தாக்கியது.
  7. 07தைவானிலும், ஜப்பானில் கனமழைக்கு எதிர்பார்ப்பு உள்ளது.

பிலிப்பைன்ஸ் பிராந்தியத்தில் 'பாவி' (Typhoon Bavi) சூறாவளி காரணமாக ஏற்பட்டுள்ள மண்சரிவுகளில் சிக்கி 15 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிலிப்பைன்ஸில் 'இண்டே' (Inday) என அழைக்கப்படும் இந்தச் சூறாவளி கடந்த புதன்கிழமை நாட்டின் எல்லைக்குள் நுழைந்தது. இது பிலிப்பைன்ஸ் கடற்பரப்பினூடாக வடக்கு லுசோனை நோக்கி நகர்கையில் சற்று பலவீனமடைந்துள்ளது.

மின்டனாவோ (Mindanao) தீவின் தெற்கு சரங்கனி (Sarangani) மாகாணத்தில் உள்ள மாலபடன் (Malapatan) பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதாக பிலிப்பைன்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் சிலர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என அந்நாட்டு மாலபடன் நகர மேயர் சால்வே சும்போ தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

இதேவேளை, நாட்டின் தெற்கு மாகாணமான லானாவ் டெல் சுர் (Lanao del Sur) பகுதியில் ஏற்பட்ட மற்றொரு மண்சரிவில் சிக்கி குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த திங்கட்கிழமை, அமெரிக்காவின் பசிபிக் பிராந்திய தீவுகளான குவாம் (Guam) மற்றும் வடக்கு மரியானா தீவுகளை (Northern Mariana Islands) இந்த அதிதீவிர சூறாவளி தாக்கியது. அங்கு உட்கட்டமைப்புகளுக்குச் சேதம் ஏற்பட்ட போதிலும் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.

தற்போது இச்சூறாவளி பிராந்தியத்தின் ஏனைய நாடுகளை நோக்கி நகர்ந்து வருவதால், அங்கிருந்தும் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

சனிக்கிழமை (11) தைவானின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலும், ஜப்பானின் சில பகுதிகளிலும் இந்தச் சூறாவளி கனமழையைக் கொட்டித் தீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் இது சீனாவில் தரைதட்டக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

தைவானில் புயல் பாதிப்பு ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படும் பகுதிகளில் நூற்றுக்கணக்கான மக்கள் ஏற்கனவே வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதுடன், பாடசாலைகள் மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/252804
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
புயல்மண்சரிவுகள்பிலிப்பைன்ஸ்சாதனங்கள்கனமழை
BestWeb.lk Top Web 2026 June Qualified