Breaking
சானி அபேசேகரவுக்கு எதிரான விசாரணை ஆவணங்களை மறைக்க திலிப பீரிஸ் அறிவுறுத்தியுள்ளார் - உதய கம்மன்பில பகிரங்க குற்றச்சாட்டு
PoliticsVirakesari

சானி அபேசேகரவுக்கு எதிரான விசாரணை ஆவணங்களை மறைக்க திலிப பீரிஸ் அறிவுறுத்தியுள்ளார் - உதய கம்மன்பில பகிரங்க குற்றச்சாட்டு

June 18, 2026·2 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01சானி அபேசேகரவுக்கு எதிராக 13 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
  2. 02ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.
  3. 03மைக்கப் பாதுகாப்பு மற்றும் அரசியலில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
  4. 04கத்தோலிக்க சர்ச் சானி மற்றும் ரவி நியமனங்களை கோரியுள்ளது.
  5. 05திலிப பீரிஸின் கடிதம் சானியிடம் அனுப்பப்பட்டது.
  6. 06கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் சானியை பதவி நீக்கம் செய்தார்.
  7. 07விசாரணை ஆவணங்களை மறைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

(இராஜதுரை ஹஷான்)

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு சானி அபேசேகரவுக்கு எதிராக 13 குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மேற்கொண்ட விசாரணை ஆவணங்களை மறைத்து வைக்குமாறு சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸ், சி.ஐ.டியின் பிரதானி சானி அபேசேகரவுக்கு கடிதம் ஊடாக அறிவுறுத்தியுள்ளார் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள பிவிதுறு ஹெல உறுமய கட்சிக் காரியாலயத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஆட்சிக்கு வந்தவுடன் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு சானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோருக்கு நியமனங்களை வழங்குமாறு கத்தோலிக்க சபை குறிப்பிட்டதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க அண்மையில் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.

அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்ட கருத்தை கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் சிறில் காமினி மறுத்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ஆட்சிக்கு வந்தவுடன் அதுவரையில் விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகள் மாற்றியமைக்கப்பட்டார்கள். அவர்களை மீண்டும் நியமிக்குமாறு குறிப்பிட்டோமே தவிர, சானி அபேசேகரவையும், ரவி செனவிரத்னவையும் நியமிக்குமாறு பெயர் குறிப்பிட்டுக் குறிப்பிடவில்லை என்று சிறில் காமினி குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட சானி அபேசகர, ரவி செனவிரத்ன ஆகியோரையே கோட்டபய ராஜபக்‌ஷ இடமாற்றம் செய்தார். முன்னர் விசாரணைகளை மேற்கொண்டவர்களை நியமிக்குமாறு கத்தோலிக்க திருச்சபை கோரிக்கை விடுத்துள்ளது. பெயர் குறிப்பிடாமல் சானி அபேசேகரவையும், ரவி செனவிரத்னவையும் நியமிக்குமாறே கத்தோலிக்க சபை தற்போதைய அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு சானி அபேசேகரவுக்கு எதிராக 13 குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவருக்கு எதிராக குற்றவியல் வழக்குத் தாக்கல் செய்யுமாறு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இதன் அடிப்படையில் தான் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, சானி அபேசேகரவை பதவி நீக்கம் செய்தார்.

சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸ் கடந்த மார்ச் மாதம் 26ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதானி சானி அபேசேகரவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு சானி அபேசேகரவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் ஆவணங்களை மறைத்து வைக்குமாறு சானி அபேசேகரவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதானி சானி அபேசேகர வழங்கும் விடயங்களை தான் திலிப பீரிஸ் நீதிமன்றத்தில் குறிப்பிடுகிறார். இவ்விருவரும் இல்லாத ஒரு விடயத்தை இருப்பதாக காண்பிப்பதற்கு முயற்சிக்கிறார்கள் என்றார்.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/250314
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
உயிர்த்த ஞாயிறுசானி அபேசேகரகத்தோலிக்க சபைவிசாரணைகோட்டாபய ராஜபக்‌ஷ
BestWeb.lk Top Web 2026 June Qualified