Breaking
அதிக உலகக் கிண்ண அத்தியாயங்களில் அணித் தலைவராக விளையாடி சாதனை படைத்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ
SportsVirakesari

அதிக உலகக் கிண்ண அத்தியாயங்களில் அணித் தலைவராக விளையாடி சாதனை படைத்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ

June 18, 2026·3 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01கிறிஸ்டியின் புதிய சாதனைகள், உலகக் கிண்ணத்தில் தொடர்ந்து ஆடி வரலாறு.
  2. 02லியோ மெஸ்ஸியின் பின், ஆறு உலகக் கிண்ணங்களில் விளையாடிய இரண்டாவது வீரர்.
  3. 03கொங்கோவுக்கு எதிரான போட்டியில் ரொனால்டோ கோல் சேர்க்க முடியாமல் போனார்.
  4. 04இங்கிலாந்து 4 - 2 என குரோஷியாவை அடித்து வெற்றியடைந்தது.
  5. 05கானா, பனாமாவிற்குள்ளான போட்டியில் வெற்றிகொண்டு பரபரப்பான கதையில் முளந்தது.
  6. 06உஸ்பெகிஸ்தானை 3 - 1 என கொலம்பியா வெற்றித்தந்து ஒரு அறிமுகம்.

(நெவில் அன்தனி)

பீபா உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் ஐந்து அத்தியாங்களில் தொடர்ச்சியாக அணித் தலைவர் பதவியை வகித்தவர் என்ற வரலாற்றுச் சாதனையை போர்த்துக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்துள்ளார்.

ஆர்ஜன்டீன அணித் தலைவர் லியோனல் மெஸ்ஸியைத் தொடர்ந்து ஆறு உலகக் கிண்ண அத்தியாயங்களில் விளையாடிய இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் ரொனால்டோ பெற்றுக்கொண்டுள்ளார்.

கொங்கோவுக்கு எதிராக ஹூஸ்டன் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற கே குழுவுக்கான போட்டியில் விளையாடியதன் மூலம் இப் பெருமைகளை ரொனால்டோ பெற்றுக்கொண்டார்.

லியோனல் மெஸ்ஸியும் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் 2006, 2010, 2014, 2018, 2022, 2026 ஆகிய ஆறு உலகக் கிண்ண அத்தியாயங்களிலும் தொடர்ச்சியாக விளையாடி வரலாறு படைத்துள்ளனர்.

மூன்றாவது தடவையாக அணித் தலைமையை ஏற்றுள்ள லியோனல் மெஸ்ஸி இம்முறை ஆஜன்டீனாவின் ஆரம்பப் போட்டியில் அல்ஜீரியாவுக்கு எதிராக ஹெட் - ட்ரிக் முறையில் கோல்களை புகுத்தியபோதிலும் கொங்கோவுக்கு எதிரான போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோவால் கோல் போட முடியாமல் போனது.

போட்டி முடிவுகள்

நான்கு உலகக் கிண்ணப் போட்டிகள் நேற்றைய தினம் நடைபெற்றன.

போர்த்துக்கலுக்கு எதிராக நேற்று நடைபெற்ற கே குழு போட்டியை கொங்கொ 1 - 1 என்ற கோல் கணக்கில் சமப்படுத்தி அசத்தியது.

உலகக் கிண்ணப் போட்டியில் 1974இல் அறிமுகமான ஸெய்ரே, 1992இல் கோங்கோ ஜனநாயக குடியரசு என பெயர் மாற்றம் பெற்ற பின்னர் இந்த வருடம்தான் முதல் தடவையாக பீபா உலகக் கிண்ணத்தில் விளையாடுகிறது.

மத்திய ஆபிரிக்காவில் கொங்கோ என்ற நதியின் பெயர் சூட்டப்பட்ட கோங்கோ, தனது ஆரம்பப் போட்டியில் ரோனல்டோவின் தலைமையிலான போர்த்துக்கல்லுடன் சம அளவில் மோதி முழு கால்பந்தாட்ட உலகையும் தன்பால் திரும்பிப் பார்க்கவைத்தது.

அப் போட்டியில் 6ஆவது நிமிடத்தில் ஜாஓ நேவ்ஸ் கோல் போட்டு போர்த்துக்கல்லை முன்னிலையில் இட்டார். எனினும் இடைவேளை நெருங்கிக் கொண்டிருந்தபோது கொங்கோ சார்பாக யொவான் விஸ்ஸா கோல் நிலையை சமப்படுத்தினார்.

அதன் பின்னர் இரண்டு அணிகளாலும் வேற்றி கோலை போட முடியாமல் போனது.

இங்கிலாந்தின் வெற்றியில் ஹெரி கேன் பிரகாசிப்பு

இங்கிலாந்துக்கும் குரோஷியாவுக்கும் இடையில் டலாஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற எல் குழு போட்டியில் இங்கிலாந்து 4 - 2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.

மூத்த வீரர் ஹெரி கேன் இரண்டு கோல்களைப் (6 நி., 42 நி.) போட்டு ஹீரோவானார்.

இங்கிலாந்தின் மற்றைய இரண்டு கோல்களை ஜூட் பெலிங்ஹாம் (47 நி.), மார்க்கஸ் ரேஷ்ஃபோர்ட் (85 நி.) ஆகியோர் போட்டனர்.

குரோஷியா சார்பாக மார்ட்டின் பட்டுரினா (36 நி.), பீட்டர் மூசா (45+5 நி.) ஆகியோர் கோல்களைப் போட்டனர்.

உபாதையீடு நேதர்த்தில் கானா வெற்றி

டொரொன்டோ விளையாட்டரங்கில் மிகவும் பரபரப்பையும் விறுவிறுப்பையும் தோற்றுவித்த கானாவுக்கும் பனாமாவுக்கும் இடையிலான எல் குழு போட்டியின் உபாதையீடு நேரத்தில் போடப்பட்ட கோலினால் கானா 1 - 0 என வெற்றீயீட்டியது.

கால்வாய்க்கு பெயர் பெற்ற பனாமா போட்டியின் முதலாவது பகுதியில் ஆதிக்கம் செலுத்தி கானாவுக்கு நெருக்கடியைக் கொடுத்தது.

ஆனால், இடைவேளைக்குப் பின்னர் கானாவின் வேகத்துக்கும் விவேகத்துக்கும் ஈடுகொடுப்பதில் பனாமா சிரமத்தை எதிர்கொண்டது.

போட்டி 90 நிமிடங்களைப் பூர்த்திசெய்தபோது இரண்டு அணிகளும் கோல்போட்டிருக்கவில்லை. தொடர்ந்து உபாதையீடு நேரத்தின் 5ஆவது நிமிடத்தில் மத்திய கள வீரர் யாலேப் இரென்கி அலாதியான கோல் ஒன்றைப் போட்டு கானாவுக்கு பரபரப்பான வெற்றியை ஈட்டிக்கொடுத்தார். இப் போட்டியில் உபாதையீடு நேரம் 12 நிமிடங்கள் நீடித்தது.

அறிமுக அணி உஸ்பெகிஸ்தானை கொலம்பியா வெற்றிகொண்டது

மெக்சிகோ சிட்டி விளையாட்டரங்கில் நடைபெற்ற கே குழு போட்டியில் உலகக் கிண்ண அறிமுக அணி உஸ்பெகிஸ்தானை 3 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் கொலம்பியா வெற்றிகொண்டது.

போட்டியின் முதலாவது பகுதியில் இரண்டு அணிகளும் கிட்டத்தட்ட சம அளவில் மோதிக்கொண்ட வண்ணம் இருந்தன.

எனினும் இடைவேளையின் பின்னர் கொலம்பியாவின் ஆதிக்கம் சற்று அதிகரித்து காணப்பட்டது.

கொலம்பியா சார்பாக டெனியல் முனோஸ் (40 நி.), லூயிஸ் டயஸ் (65 நி.), ஜெமின்டன் கெம்ப்பஸ் (90+9 நி.) ஆகியோரும் உஸ்பெகிஸ்தான் சார்பாக அபோஸ்பெக் பைஸுல்லாயேவ் (60 நி.) என்பவரும் கோல்களைப் போட்டனர்.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/250286
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
கால்பந்துஉலகக் கிண்ணம்ரோனால்டோமெஸ்சிஇங்கிலாந்துகானா
BestWeb.lk Top Web 2026 June Qualified