உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள எழுத்தாணை மனு மேலதிக விசாரணைக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த மனு எதிர்வரும் 24 ஆம் திகதி மீண்டும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் பின்னணியில், தம்மைக் கைது செய்வதைத் தடுக்கும் வகையில் இந்த மனுவை முன்னாள் ஜனாதிபதி தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
