Breaking
பீபா உலகக் கிண்ணத்தில் அதிக கோல்களுக்கான சாதனையை சமப்படுத்தினார் மெஸ்ஸி ; அல்ஜீரியாவை வென்றது ஆர்ஜன்டீனா
SportsVirakesari

பீபா உலகக் கிண்ணத்தில் அதிக கோல்களுக்கான சாதனையை சமப்படுத்தினார் மெஸ்ஸி ; அல்ஜீரியாவை வென்றது ஆர்ஜன்டீனா

June 17, 2026·2 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01மெஸ்ஸி அல்ஜீரியாவுக்கு எதிரான போட்டியில் ஹெட்-டிரிக் கோல்கள் அடித்தார்.
  2. 02ஆர்ஜென்டினா 3 - 0 என வெற்றியை தேர்ந்தெடுத்தது.
  3. 03இது மெஸ்ஸியின் உலகக் கிண்ணத்தில் முதலாவது ஹெட்-டிரிக்.
  4. 04மெஸ்ஸி 16 கோல்களைப் பெற்றுள்ளவர் மிரஸ்லாவ் க்ளோஸின் சாதனையை சமம் செய்தார்.
  5. 05நோர்வே ஈராக்கை 4 - 1 என வென்றது.
  6. 06பிரான்ஸ் செனகலை 3 - 1 என சந்தித்தது.

(நெவில் அன்தனி)

அல்ஜீரியாவுக்கு எதிராக கென்சாஸ் சிட்டி விளையாட்டரங்கில் நடைபெற்ற ஜே குழுவுக்கான பீபா உலகக் கிண்ணப் போட்டியில் லியோனல் மெஸ்ஸி ஹெட் - ட்ரிக் கோல்கள் அடித்து நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனாவுக்கு 3 - 0 என இலகுவான வெற்றியை ஈட்டிக்கொடுத்தார்.

உலகக் கிண்ண காலப்பந்தாட்டத்தில் மெஸ்ஸி பதிவு செய்த முதலாவது ஹெட் - ட்ரிக் இதுவாகும். அத்துடன் இந்த வருட உலகக் கிண்ணத்தில் முதலாவது ஹெட் - ட்ரிக் ஆகவும் பதிவானது.

இந்த ஹெட் - ட்ரிக் கோல்கள் மூலம் ஜேர்மனி வீரர் மிரஸ்லாவ் க்ளோஸின் 16 மொத்த கோல்கள் என்ற உலகக் கிண்ண சாதனையை லியோனல் மெஸ்ஸி சமப்படுத்தினார்.

இப் போட்டிக்கு முன்பதாக 13 கோல்களை மொத்தமாக போட்டிருந்த மெஸ்ஸி, அல்ஜீரியாவுக்கு எதிராக 17, 60, 77ஆவது நிமிடங்களில் கோல்களைப் புகுத்தி ஹெட் - ட்ரிக்கை பூர்த்திசெய்து தனது மொத்த கோல் எண்ணிக்கையை 16 உயர்த்திக்கொண்டார்.

இதேவேளை பொஸ்டன் விளையாட்டரங்கில் நடைபெற்ற ஐ குழுவுக்கான போட்டியில் ஈராக்கை 4 - 1 என்ற கோல்கள் கணக்கில் நோர்வே வெற்றிகொண்டது.

நோர்வே சார்பாக ஹாலண்ட் 2 கோல்களையும் லியோ ஒஸ்டிகார்ட் ஒரு கோலையும் புகுத்தினர். கடைசிக் கட்டத்தில் நான்காவது கோலை நோர்வேக்கு இனாமாக போட்டுக்கொடுத்த ஈராக் வீரர் ஹுசெய்ன் அதற்கு முன்னர் போட்டியின் முதலாவது பகுதியில் தனது அணிக்கான கோலைப் போட்டிருந்தார்.

நியூ யோர்க் நியூ ஜேர்சி விளையாட்டரங்கில் நடைபெற்ற இதே குழுவுக்கான மற்றொரு போட்டியில் செனகலை 3 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் பிரான்ஸ் வெற்றிகொண்டது.

பிரான்ஸ் சார்பாக எம்பாப்பே 2 கோல்களையும் பார்க்கோலா ஒரு கோலையும் செனகல் சார்பாக எம்பாயே ஒரு கோலையும் புகுத்தினர்.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/250144
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
மெஸ்ஸிஉலகக் கிண்ணம்அல்ஜீரியாநோர்வேபிரான்ஸ்
BestWeb.lk Top Web 2026 June Qualified