Breaking
யோஷித்த ராஜபக்ஷவின் மனு மீதான தீர்ப்பு ஜூலை 03ஆம் திகதி வெளியாகும்: மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவிப்பு!
PoliticsVirakesari

யோஷித்த ராஜபக்ஷவின் மனு மீதான தீர்ப்பு ஜூலை 03ஆம் திகதி வெளியாகும்: மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவிப்பு!

June 16, 2026·1 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01யோஷித்த ராஜபக்ஷ வழக்கு விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.
  2. 02ஜூலை 03 அன்று தீர்ப்பு அறிவிக்கப்படும்.
  3. 03மனுதாரர் யோஷித்தின் சட்டத்தரணி ஹஃபீல் ஃபாரிஸ் கருத்து தெரிவித்தார்.
  4. 04சட்டமா அதிபர் சார்பில் ஜெனக பண்டார ஆஜராகின.
  5. 05இருதரப்பு வாதங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டன.
  6. 06விசாரணை அமல் ரணராஜா மற்றும் கலாநிதி சுமுது பிரேமச்சந்திர முன்னிலையில் நடந்தது.

பணச்சுத்திகரிப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் தமக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் சதித்திட்டம் என்ற குற்றச்சாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என தீர்ப்பளிக்குமாறு கோரி, யோஷித்த ராஜபக்ஷ தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணைகள் நிறைவடைந்துள்ளன.

இது தொடர்பான தீர்ப்பு வரும் ஜூலை மாதம் 03ஆம் திகதி வெளிப்படுத்தப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மனுதாரரான யோஷித்த ராஜபக்ஷ சார்பில் சட்டத்தரணி ஹஃபீல் ஃபாரிஸ் கருத்துக்களை முன்வைத்தார்.

அதேவேளை, சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார ஆஜராகி கருத்துக்களை முன்வைத்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பின்னர், விசாரணைகளை நிறைவுக்கு கொண்டு வந்த அமல் ரணராஜா மற்றும் கலாநிதி சுமுது பிரேமச்சந்திர ஆகியோரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/250068
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
யோஷித்தசட்டம்விசாரணைதீர்ப்புதவறுகள்
BestWeb.lk Top Web 2026 June Qualified