Breaking
மத்திய கிழக்கின் மோதல் முடிவடையும் சூழல் எரிபொருள் விலையை அரசாங்கம் குறைக்க வேண்டும் - நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தல்
PoliticsVirakesari

மத்திய கிழக்கின் மோதல் முடிவடையும் சூழல் எரிபொருள் விலையை அரசாங்கம் குறைக்க வேண்டும் - நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தல்

June 16, 2026·2 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01மத்திய கிழக்கின் மோதல் நிலை முடிவடைகிறது.
  2. 02இந்திய அரசு எரிபொருள் விலையை குறைக்க வேண்டும்.
  3. 03பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பேசியது.
  4. 04புதிய தலைமைத்துவத்தை நியமிப்போம்.
  5. 05மாகாணசபை தேர்தல் நடத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
  6. 06மக்கள் மீதும் நிர்வாக சுமை உள்ளது.
  7. 07நிதி இழப்பினை மறைக்கின்றன.

(இராஜதுரை ஹஷான்)

மத்திய கிழக்கின் மோதல் நிலைமை தற்போது முடிவடையும் நிலையில் காணப்படுகிறது. ஆகவே இனியேனும் அரசாங்கம் எரிபொருள் விலையை குறைக்க வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (16) நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

கட்சி என்ற அடிப்படையில் பலமாக எழுச்சிப் பெற்றுள்ளோம். தொகுதி அமைப்பாளர்களுக்கு புதிய தலைமைத்துவத்தை நியமிப்போம். எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேர்தலுக்காக தயார் நிலையில் உள்ளோம்.

சட்ட சிக்கலை குறிப்பிட்டுக் கொண்டு மாகாணசபைத் தேர்தலை தொடர்ந்து பிற்போடாமல் எத்தேர்தல் முறையிலாவது தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம்.மாகாணசபைத் தேர்தலில் வேண்டுமென்றே சட்ட சிக்கல் ஏற்படுத்தப்பட்டது. அதற்கு மக்கள் விடுதலை முன்னணி முழுமையாக ஒத்துழைப்பு வழங்கியது.

அரசாங்கத்தின் பலவீனமான நிர்வாகத்தின் சுமை ஒட்டுமொத்த மக்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ளது.மத்திய கிழக்கு மோதலை குறிப்பிட்டுக் கொண்டு ஒவ்வொரு மாதமும் எரிபொருள் மற்றும் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டது. தரமற்ற நிலக்கரி கொள்வனவினால் ஏற்பட்ட நிதி இழப்பு முழுமையாக மறைக்கப்பட்டது.

மத்திய கிழக்கின் மோதல் நிலைமை தற்போது முடிவடையும் நிலையில் காணப்படுகிறது. ஆகவே இனியேனும் அரசாங்கம் எரிபொருள் விலையை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரமணமளிக்க வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/250083
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
இராஜதுரைஎரிபொருள்மோத்தல்தேர்தல்நிர்வாகம்
BestWeb.lk Top Web 2026 June Qualified