Breaking
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் ஒரு முயற்சியாகும் - சுதந்திர சட்டத்தரணிகள் சங்கம்
PoliticsVirakesari

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அறிவிப்பு கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் ஒரு முயற்சியாகும் - சுதந்திர சட்டத்தரணிகள் சங்கம்

June 16, 2026·1 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01சுதந்திர சட்டத்தரணிகள் சங்கம் கவலை व्यक्तித்துள்ளது.
  2. 02அனைத்து அரசியல் தலைவர்கள் மீது விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
  3. 03இதடக்கம் திலித் ஜயவீர உள்ளிட்டோருக்கு தீர்வு தேடப்படுகிறது.
  4. 04பொலிஸ் அதிகாரம் தவறாக பயன்படுத்தப்படுவதை விமர்சிக்கிறது.
  5. 05அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டுமானங்கள் பாதிக்கப்படும்.

(இராஜதுரை ஹஷான்)

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் அரசியல் தலைவர்கள் சிலருக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளமை கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் ஒரு முயற்சியாகும் என சுதந்திர சட்டத்தரணிகள் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சங்கம் மேலும் கூறுகையில்,

பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவங்ச, உதய கம்மன்பில மற்றும் அரசியல் கட்சி செயற்பாட்டாளர்களான மஹிந்த பத்திரண, அசங்க நவரத்ன மற்றும் சுகீஷ்வர பண்டார ஆகியோருக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை அரசியல் ஒடுக்குமுறையாகும்.

அரசியல் எதிர்ப்புக் கொள்கை கொண்டுள்ளவர்களை முடக்குவதற்கு பொலிஸ் அதிகாரம் தவறாக பயன்படுத்தப்படுவது கவலையளிக்கிறது.

இத்தகைய நடவடிக்கைகள் அரசியலமைப்பின் மூலம் உரித்தாக்கப்பட்டுள்ள பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படைச் சுதந்திரங்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/250090
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
சுதந்திரம்அரசியல்அதிகாரம்விசாரணைகள்
BestWeb.lk Top Web 2026 June Qualified