Breaking
அமெரிக்கா - ஈரான் இடையேயான அடுத்தகட்ட அமைதிப் பேச்சுவார்த்தை மிகவும் எளிதாக இருக்கும் - டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை
PoliticsVirakesari

அமெரிக்கா - ஈரான் இடையேயான அடுத்தகட்ட அமைதிப் பேச்சுவார்த்தை மிகவும் எளிதாக இருக்கும் - டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை

June 16, 2026·2 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01டொனால்ட் ட்ரம்ப் ஈரானுடன் பேச்சுவார்த்தைகள் எளிதாக இருக்கும் என நம்புகிறார்.
  2. 02கத்தார் அமீருடன் உரையாடுவதைப் போது அவர் இதனை தெரிவித்தார்.
  3. 03பதவியில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகள் பற்றிய பொருளாதார விவாதங்கள் நடக்கும்.
  4. 04இரண்டாம் கட்டத்தில் ஈரானுக்கு நிதி உதவிகள் குறித்து விவாதங்கள் உள்ளன.
  5. 05அமெரிக்கா ஈரானில் முதலீடு செய்யாது என ட்ரம்ப் தெரிவித்தார்.
  6. 06300 பில்லியன் டாலர் அழகான மறுசீரமைப்புக்கு வளைகுடா நாடுகள் நிதியளிக்க பெரும்பங்கு எடுத்துள்ளன.

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே சமீபத்தில் எட்டப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தொடர்ந்து, அதன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகள் ஆரம்பக் கட்டத்தை விடவும் "மிகவும் எளிதாக" இருக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பிரான்சில் நடைபெற்று வரும் ஜி7 உச்சிமாநாட்டின் பக்கவிளைவாக , அமைதிப் பேச்சுவார்த்தையின் முக்கிய மத்தியஸ்தராகச் செயல்படும் கத்தார் நாட்டு அமீரை (Emir of Qatar) நேரில் சந்தித்துப் பேசிய போதே ஜனாதிபதி ட்ரம்ப இதனைத் தெரிவித்துள்ளார்.

"இந்த அமைதி செயல்முறை தற்போது இரண்டாம் கட்டத்திற்கு நகர்கிறது. இந்த இரண்டாவது கட்டம் உண்மையில் நமக்கு மிகவும் எளிதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்" என கத்தார் அமீருடனான சந்திப்பின் போது ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைகளில் ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த மிக முக்கிய தொழில்நுட்ப ரீதியிலான விவாதங்கள், சர்வதேச தடைகளால் பாதிக்கப்பட்டுள்ள ஈரானுக்கு வழங்கப்பட வேண்டிய நிதி நிவாரணங்கள், உலகளாவிய எரிசக்தி வர்த்தகப் பாதையான ஹொர்முஸ் நீரிணையை மீண்டும் முழுமையாகத் திறப்பது குறித்த விரிவான வழிமுறைகள் ஆகிய முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளையில், இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஈரானுக்கு அமெரிக்காவின் நிதி அள்ளி வழங்கப்படலாம் எனத் தனது நட்பு நாடுகள் மற்றும் கூட்டணித் தரப்பிலிருந்து எழுந்த அச்சங்களையும், விமர்சனங்களையும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.

"இந்த ஒப்பந்தத்திற்காக அமெரிக்கா தனது சொந்தப் பணம் எதையும் ஈரானில் முதலீடு செய்யப் போவதில்லை" என ட்ரம்ப் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

இதற்கு மாற்றாக, போரினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்காக உருவாக்கப்படவுள்ள 300 பில்லியன் டாலர் மதிப்புள்ள பிரம்மாண்ட மறுசீரமைப்பு நிதியத்தை , வளைகுடா நாடுகளே முழுமையாக நிதியளித்து ஏற்கும் என அரச அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/250102
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
அமெரிக்காஈரான்பேச்சுவார்த்தைட்ரம்ப்கத்தார்
BestWeb.lk Top Web 2026 June Qualified