(நெவில் அன்தனி)
இலங்கை வளர்ந்துவரும் வீரர்கள் அணிக்கும் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் பயிற்சியக அணிக்கும் இடையில் திங்கட்கிழமை (15) ஆரம்பமான இரண்டாவது நான்கு நாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் பயிற்சியக அணி அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 231 ஓட்டங்களைப் பெற்றது.
மேற்கிந்தியத் தீவுகள் கிக்கெட் பயிற்சியக அணி ஒரு கட்டத்தில் 4 விக்கெட்களை இழந்து 37 ஓட்டங்களை மாத்திரம் பெற்ற தடுமாறியது.
ஆனால், ஷக்கரே பெரிஸ், அணித் தலைவர் ரிவால்டோ கிளார்க் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 120 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை ஓரளவு நல்ல நிலையில் இட்டனர்.
ரிவால்டோ கிளார்க் 57 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.
அதனைத் தொடர்ந்து ஷக்கரே பெரிஸ், நேதன் எட்வேர்ட் ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் மேலும் 53 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
ஷக்கரே பெரிஸ் 99 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஆட்டம் இழந்தார். நேதன் எட்வேர்ட் 28 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் சமோத் பட்டகே 51 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் நிசல அபேரட்ன 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடும் இலங்கை வளர்ந்து வரும் வீரர்கள் அணி முதலாம் நாள் ஆட்டநேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 37 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
புலிந்து பெரேரா 13 ஓட்டங்களுடனும் ரவிந்து ரசன்த 5 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். 12 வைட்கள் உட்பட 19 உதிரிகள் இலங்கை வளர்ந்துவரும் வீரர்கள் அணிக்கு கிடைத்தது.
