Breaking
இலங்கைக்கு 151 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது நியூஸிலாந்து
SportsVirakesari

இலங்கைக்கு 151 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது நியூஸிலாந்து

June 16, 2026·1 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01இலங்கை மற்றும் நியூஸிலாந்து இடையேயான கிரிக்கெட் போட்டி கதை.
  2. 02நியூஸிலாந்து 150 ஓட்டங்களை அடித்து விளையாடியுள்ளது.
  3. 03இலங்கை பந்துவீச்சாளர்களை துரிதமாக எதிர்கொள்வதில் நியூஸிலாந்து சிரமத்தை எதிர்கொண்டது.
  4. 04அணித் தலைவி அமேலியா மற்றும் சொஃபி டிவைன் 45 ஓட்டங்களை அடித்தனர்.
  5. 05காவிஷா டில்ஹாரி 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை பெற்றார்.
  6. 06இலங்கை 151 ஓட்டங்களை அடிப்பதற்கு போட்டி முன்னேறுகிறது.

(நெவில் அன்தனி)

சவுத்ஹாம்ப்டன், ரோஸ் பௌல் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் மிகவும் தீர்மானம் மிக்க குழு 2 க்கான ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு 151 ஓட்டங்களை நியூஸிலாந்து வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீரமானித்த நியூஸிலாந்து 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 150 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை பந்துவீச்சாளர்களை ஆரம்பத்தில் எதிர்கொள்வதில் சிரமத்தை எதிர்கொண்ட நியூஸிலாந்து பின்னர் ஓட்டவேகத்தை சற்று அதிகரித்துக்கொண்டது.

அணித் தலைவி அமேலியா (மெலி) கேர், சிரேஷ்ட வீராங்கனை சொஃபி டிவைன் ஆகிய இருவரும் தலா 45 ஓட்டங்களைப் பெற்றதால் நியூஸிலாந்து ஓரளவு பலமான நிலையை அடைந்தது.

பந்துவீச்சில் காவிஷா டில்ஹாரி 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

நியூஸிலாந்து 150 ஓட்டங்களைத் தக்கவைக்குமா, 151 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை இலங்கை அடையுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/250119
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
கிரிக்கெட்இலங்கைநியூஸிலாந்துமகளிர்உலகக் கிண்ணம்
BestWeb.lk Top Web 2026 June Qualified