Breaking
இந்திய A அணியுடனான போட்டியில் இலங்கை A அணி வெற்றி
SportsNewsfirst

இந்திய A அணியுடனான போட்டியில் இலங்கை A அணி வெற்றி

June 16, 2026·2 min read
Photo: Newsfirst
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01இலங்கை A அணியினால் இந்திய A அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி.
  2. 02இந்திய A அணி 49.2 ஓவர்களில் 265 ஓட்டங்கள் பெற்றது.
  3. 03Suryansh Shedge 72 ஓட்டங்கள், Vipraj Nigam 51 ஓட்டங்கள் கொண்டனர்.
  4. 04விஜயகாந்த் வியாஸ்காந்த் 3 விக்கெட்டுகளை பிடித்தார்.
  5. 05இலங்கை A அணி 50 ஓவர்களில் 265 ஓட்டங்களை பெற்றது.
  6. 06சதீர சமரவிக்கிரம 93 ஓட்டங்களை அடித்தார்.
  7. 07சுப்பர் ஓவரில் இலங்கை A 16 ஓட்டங்களை பெற்று வெற்றியை வைத்தது.
  8. 08இலங்கை 3 போட்டிகளில் 2 வெற்றிகளைப் பெற்றுள்ளது.

Colombo (News 1st) இலங்கை, இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான முத்தரப்பு கிரிக்கெட் தொடரில், இந்திய A அணியுடனான போட்டியில் இலங்கை A அணி வெற்றி பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய A அணி 49.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 265 ஓட்டங்களை பெற்றது.

Suryansh Shedge 72 ஓட்டங்களையும் Vipraj Nigam 51 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர்.

விஜயகாந்த் வியாஸ்காந்த் தலா 03 விக்கெட்களை கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை A அணி தலைவர் நிரேஷன் திக்வெல்ல 37 ஓட்டங்களை பெற்றார்.

அணி சார்பில் சதீர சமரவிக்கிரம 93 ஓட்டங்களை பெற்றார்.

50 ஓவர்கள் நிறைவில் இலங்கை A அணி 09 விக்கெட் இழப்பிற்கு 265 ஓட்டங்களை பெற்றது.

போட்டியின் வெற்றியை தீர்மானிக்கும் சுப்பர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை A அணி 16 ஓட்டங்களை பெற்றது.

17 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய A அணியால் 09 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.

இதன் பிரகாரம் இலங்கை A அணி வெற்றி பெற்றது.

தொடரில் பங்கேற்ற 3 போட்டிகளில் இரண்டை வெற்றி கொண்ட இலங்கை, முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Read the full story on Newsfirst.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Newsfirst
https://tamil.newsfirst.lk/2026/06/16/இந்திய-a-அணியுடனான-ப
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Newsfirst
கிரிக்கெட்இலங்கைஇந்தியாவெற்றிஅணி
BestWeb.lk Top Web 2026 June Qualified