Breaking
இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை
ScienceVirakesari

இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை

June 16, 2026·2 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது.
  2. 02மே 3 அன்று நீட் பரீட்சையின் வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டுகள் உள்ளன.
  3. 03ராஜஸ்தான், பிகாரில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  4. 04மீள்பரீட்சை ஜூன் 21 ஆம் திகதி நடைபெறுகின்றது.
  5. 05தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளது.
  6. 06ஜூன் 30 ஆம் திகதி வரை செய்திகளை திருத்தவும் தடையை எதிர்கொள்கிறார்கள்.
  7. 07இது பரீட்சை தொடர்பான தகவல்களின் பாதுகாப்புக்கு முன்னேற்றம்.

இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே 3 ஆம் திகதி நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ நுழைவுப் பரீட்சையின் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து, பல மாநிலங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. ராஜஸ்தான், பிகார் உள்ளிட்ட பகுதிகளில் வினாத்தாள் கசிவு தொடர்பில் பலர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதனை அடுத்து, முன்னர் நடைபெற்ற நீட் தேர்வு இரத்து செய்யப்பட்டு, மீள்பரீட்சை எதிர்வரும் ஜூன் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது. தேர்வின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், தேர்வு தொடர்பான தகவல்கள் மீண்டும் கசியாமல் தடுக்கும் வகையில், தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 இன் பிரிவு 69A இன் அவசரகால விதிகளின் கீழ், டெலிகிராம் செயலிக்கு ஜூன் 22 ஆம் திகதி வரை தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அறிவித்துள்ளது.

மேலும், டெலிகிராம் தளத்தில் ஏற்கனவே அனுப்பப்பட்ட செய்திகளை திருத்தும் வசதியையும் எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதி வரை முடக்குமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

நீட் பரீட்லையின் வினாத்தாள் டெலிகிராம் வழியாக பரவியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/250065
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
நீட்டெலிகிராம்தடைகுறைப்புகள்பரீட்சை
BestWeb.lk Top Web 2026 June Qualified