முழு நாடுமே ஒன்றாக என்ற நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்துக்கமைய புதன்கிழமை ( 17 ) மாத்திரம் 1044 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு என்ற தொனிப்பொருளின் கீழ் கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதியிலிருந்து நாடளாவிய ரீதியில் தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய புதன்கிழமை (17) நாடு முழுவதும் சுமார் 1031 சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த பொலிஸார், 1044 சந்தேகநபர்கள் கைது செய்துள்ளனர். மேற்படி நடவடிக்கைகமைய 567 கிராம் ஐஸ் போதைப்பொருள்,369 கிராம் ஹெரோயின், 793 கிராம் கஞ்சா மற்றும் 403 போதை மாத்திரைகள் ஆகிய அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் கைதானவர்களில் 5 சந்தேகநபர்களுக்கு எதிராக தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள சந்தேகநபர்கள் 6 பேர் மறுவாழ்வு நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
