தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த ஒரு பேருந்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, அவ்வழியே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலை காரணமாக, காலி மற்றும் மாத்தறை நோக்கிப் பயணிக்கும் ஓட்டுநர்கள், அதிவேக நெடுஞ்சாலையிலிருந்து வெளியேறுவதற்கு வெலிப்பென்ன வெளியேறும் வழியைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த பொலிஸாரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் ஓட்டுநர்கள் விழிப்புடன் இருக்குமாறும், பொலிஸாரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
