முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட, கேப்பாப்பிலவு கிராமமக்கள் தமது பூர்வீகக் காணியை விடுவிக்க வலியுறுத்தி 25ஆவது நாளாக நேற்று (18) சனிக்கிழமை தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கேப்பாப்பிலவு மக்களின் 25 ஆவது நாள் தொடர் போராட்டத்தில் இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் மற்றும் துரைராசா ரவிகரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
அத்தோடு இவ்வாறு போராட்டத்தில் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன், வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மற்றும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்பிலவு மக்களாலும் போராட்டம் தொடர்பான தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
