Breaking
சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionLeading clothing retailer owner remanded over Customs probeProtecting street animals a shared responsibility, says Prime MinisterKushbu’s ‘Maharanis – Tinsel Queens’ to showcase Sri Lanka’s culture and scenic beautyMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri Lankaசந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionLeading clothing retailer owner remanded over Customs probeProtecting street animals a shared responsibility, says Prime MinisterKushbu’s ‘Maharanis – Tinsel Queens’ to showcase Sri Lanka’s culture and scenic beautyMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri Lanka
பாதாள உலகக் குழுவினர் சிறைச்சாலைச் சதித்திட்டங்கள் ஒருபோதும்பலிக்காது - பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க எச்சரிக்கை!
PoliticsVirakesari

பாதாள உலகக் குழுவினர் சிறைச்சாலைச் சதித்திட்டங்கள் ஒருபோதும்பலிக்காது - பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க எச்சரிக்கை!

July 17, 2026·3 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01அரசாங்கம் உதவியாளர் ருவான் ரணசிங்கர் கருத்துரைத்தார்.
  2. 02எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேலி அரசியலில் ஈடுபட்டுள்ளார்.
  3. 03பாதாள உலகக் குழுக்கள் திட்டமிட்ட அனர்கள் என்ற சூட்டுகளால் கையாளப்பட்டுள்ளன.
  4. 04துப்பாக்கிச் சூடுகள் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
  5. 05சிறைச்சாலைகளில் திட்டங்களை தண்டு கொள்ள முயற்சிக்கிறார்கள்.
  6. 06மக்கள் அரசாங்கத்திற்குச் சமர்பனைகளை கூறியுள்ளனர்.
  7. 07எதிர்க்கட்சியில் போதைப்பொருள் தொடர்பான விவகாரங்கள் வெளியுறவு அடைந்துள்ளன.

(செ.கவிஷனா)

நாட்டில் திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் பாதாள உலகக் குழுக்களை ஒழிக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் தீவிரமாக முன்னெடுத்து வரும் நிலையில், அதனை ஆதரிப்பதற்குப் பதிலாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மக்கள் மத்தியில் தவறான கருத்துகளைப் பரப்பி கேலி அரசியலில் ஈடுபட்டு வருவதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

நிகழ்வொன்றில் கலந்து கொண்டு வியாழக்கிழமை (16) உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

கடந்த காலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தற்செயலாக நடந்தவை அல்ல, நாட்டில் திட்டமிட்ட முறையில் பாதாள உலகக் குழுக்களை உருவாக்கி, அவர்களுக்கு எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுத்த போது, அவர்கள் வீதிகளில் துப்பாக்கிச் சூடுகளை நடத்தி தப்பிக்கப் பார்த்தனர்.

எனினும், தற்போது வீதிகளில் துப்பாக்கிச் சூடு நடத்துவது முற்றாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், அந்தத் துப்பாக்கிப் பிரயோகங்களுடன் சம்பந்தப்பட்ட பாதாள உலகக் குழுவினர் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளியில் இவ்வாறான செயற்பாடுகளை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், தற்போது இந்த பாதாள உலகக் குழுவினர் சிறைச்சாலைகளுக்குள் தங்களது திட்டங்களை நடத்தும் முயற்சிகளை ஆரம்பித்துள்ளனர். சிறைச்சாலைகளுக்குள் துப்பாக்கிச் சூடு நடத்தி, புலனாய்வு அதிகாரிகளைக் கொலை செய்வதன் மூலம் அரசாங்கம் முன்னெடுக்கும் இந்த பாதாள உலக ஒழிப்பு நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்திவிடலாம் என்று அவர்கள் நினைத்தால், அது கனவிலும் நடக்காத காரியம் ஆகும்.

நாட்டில் இவ்வாறானதொரு தீவிரமான பாதுகாப்புச் சூழ்நிலை நிலவி வரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மக்கள் மத்தியில் வேறு விதமான கருத்துக்களைக் கூறி கேலிச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார். அத்துடன், அவர் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில விவசாயிகளைச் சேர்த்துக்கொண்டு ஆர்ப்பாட்டங்களை நடத்துவதிலும், ஏதாவது ஒரு ஊடக அலைவரிசையில் பேச வாய்ப்பு கிடைத்தால் போதும் என்ற நிலையிலும் உள்ளார். அதுமட்டுமன்றி இந்த அரசாங்கம் பதவி விலக வேண்டும், ஜனாதிபதி வீட்டிற்குப் போக வேண்டும், அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்று கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்த நாட்டு வரலாற்றிலேயே மிக அதிகமான மக்கள் ஆணையை இந்த நாட்டு மக்கள் தங்களுக்கு வழங்கியிருப்பதுடன், பொதுமக்கள் எப்போது இனி நீங்கள் செய்தது போதும் என்று சொல்கிறார்களோ, அன்றுதான் தாங்கள் வீட்டிற்குப் போவோம். அதைவிடுத்து, எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் தங்களுடைய போதைப்பொருள் வலை அமைப்புகள் சிக்கிக்கொள்ளும் போதும், பாதாள உலகக் குழுவினரிடம் இருந்து இலஞ்சம் வாங்கியது மற்றும் கொலைகள் குறித்து அனைத்தும் வெளிவரும் சந்தர்ப்பத்திலும், தங்களது திருட்டை மறைப்பதற்காக அரசாங்கத்தை வீட்டுக்குப் போகச் சொன்னால், அதற்கு ஒருபோதும் தாங்கள் தயாராக இல்லை என்றார்.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/253430
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
அரசியல்பாதாள உலகம்செலவியல்கூட்டம்சட்ட நடவடிக்கைகள்
BestWeb.lk Top Web 2026 June Qualified