Breaking
சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri LankaIndia and Indonesia: Asian giants that refuse to bow to the superpowers – AnalysisIndia launches first hydrogen-powered train in clean energy pushFormer Sri Lankan cricket stars pay tribute to Sir Garfield Sobersசந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri LankaIndia and Indonesia: Asian giants that refuse to bow to the superpowers – AnalysisIndia launches first hydrogen-powered train in clean energy pushFormer Sri Lankan cricket stars pay tribute to Sir Garfield Sobers
வங்கி மோசடி வழக்கு: ஜகத் மனுவர்ண உள்ளிட்ட 28 பேரின் விசாரணை அறிக்கைகள் சட்டமா அதிபரிடம்
WorldVirakesari

வங்கி மோசடி வழக்கு: ஜகத் மனுவர்ண உள்ளிட்ட 28 பேரின் விசாரணை அறிக்கைகள் சட்டமா அதிபரிடம்

July 16, 2026·2 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01தனியார் வங்கி மோசடி தொடர்பான வழக்கு தொடங்கியுள்ளது.
  2. 02ஜகத் மனுவர்ண உள்ளிட்ட 28 சந்தேகநபர்களுக்கு எதிராக நடவடிக்கை.
  3. 03சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக விசாரணை அறிக்கைகள் அனுப்பப்பட்டது.
  4. 04மோசடியின் ஆவணங்களில் கையொப்பம் பரிசோதனை செய்யப்படுகிறது.
  5. 05நீதிமன்றத்தில் 13வது மற்றும் 17வது சந்தேகநபர்கள் மன்னிப்பு பெறவில்லை.
  6. 06இந்த வழக்கு டிசம்பர் 9ல் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

(எம்.எப்.எம்.பஸீர், செ.சுபதர்ஷனி)

தனியார் வங்கி ஒன்றில் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து 250 இலட்சம் ரூபா (25 மில்லியன்) பணத்தை மோசடி செய்த சம்பவம் தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட 28 சந்தேகநபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணை அறிக்கைகள் சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் புதன்கிழமை (15) கோட்டை நீதிவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

புதன்கிழமை (15) கோட்டை நீதிவான் பசன் அமரசேன முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் இதனை மன்றுக்குத் தெரியப்படுத்தினர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக அறிக்கை ஒன்றினை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த விசாரணை அதிகாரிகள் விடயங்களை முன்வைக்கையில், மோசடி இடம்பெற்ற வங்கியின் ஆவணங்களில் கையொப்பமிட்ட நபர்களின் கையெழுத்து தொடர்பான பரிசோதனைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன், இந்த விவகாரம் தொடர்பான விசாரணைக் கோப்புகள் தற்போது சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.

நேற்றைய தினம் வழக்கு விசாரணைக்காகச் சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த நிலையில், நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறிய 13 ஆவது மற்றும் 17 ஆவது சந்தேகநபர்களுக்கு எதிராக நீதிவான் பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டார். இந்நிலையில் குறித்த வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி மீண்டும் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/253323
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
மோசடிவழக்குஜகத் மனுவர்ண்சூத்திரங்கள்கூட்டம்
BestWeb.lk Top Web 2026 June Qualified