Breaking
சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri LankaIndia and Indonesia: Asian giants that refuse to bow to the superpowers – AnalysisIndia launches first hydrogen-powered train in clean energy pushFormer Sri Lankan cricket stars pay tribute to Sir Garfield Sobersசந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri LankaIndia and Indonesia: Asian giants that refuse to bow to the superpowers – AnalysisIndia launches first hydrogen-powered train in clean energy pushFormer Sri Lankan cricket stars pay tribute to Sir Garfield Sobers
முன்னாள் அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான ஊழல் வழக்கு மேலதிக சாட்சி விசாரணை செப்டெம்பர் 7 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு
WorldVirakesari

முன்னாள் அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான ஊழல் வழக்கு மேலதிக சாட்சி விசாரணை செப்டெம்பர் 7 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

July 16, 2026·2 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01குமார ஜயகொடியின் மீது ஊழல் வழக்கு தொடர்கிறது.
  2. 02மேலும் சாட்சிகள் 7 செப்டெம்பர் அன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
  3. 032016ல் லங்கா உர நிறுவனத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊழல் குற்றம் உள்ளது.
  4. 04அனைத்து சாட்சிகள் மேல் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டனர்.
  5. 05நாட்டிற்கு 8.8 மில்லியன் ரூபா நன்மை இழப்பு இது.
  6. 06ஊழல் எதிர்ப்புக் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

லங்கா உர நிறுவன மோசடி முன்னாள் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள ஊழல் வழக்கின் மேலதிக சாட்சி விசாரணைகளை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 7 ஆம் திகதி இடம்பெறும் என கொழும்பு மேல் நீதிமன்றம் புதன்கிழமை (15) உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல முன்னிலையில் இந்த வழக்கு புதன்கிழமை (15) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதற்கமைய நேற்றைய தினம் வழக்கு விசாரணையின் போது, முறைப்பாட்டுத் தரப்பின் சாட்சியாளர்கள் இருவரின் சாட்சியங்கள் நீதிமன்றத்தினால் பதிவு செய்யப்பட்டன.

இதனைத் தொடர்ந்தே, வழக்கின் மேலதிக சாட்சி விசாரணைகளை செப்டெம்பர் மாதம் 7 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.

2016 ஆம் ஆண்டு லங்கா உர நிறுவனத்தின் கொள்முதல் முகாமையாளராகப் பணியாற்றிய காலப்பகுதியில்தனியார் நிறுவனம் ஒன்றுக்கு நன்மை பயக்கும் வகையில், உர நிறுவனத்தின் களஞ்சியசாலைக்குத் தரைவிரிப்பினை இடும் பணிக்கான ஒப்பந்தத்தை வழங்கியுள்ளதுடன், இதன் மூலம் அரசாங்கத்துக்கு சுமார் 8,859,708 ரூபா நட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதற்கமைய ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 70 ஆவது உப பிரிவின் கீழ், ஊழல் என்னும் குற்றத்தைச் செய்துள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் பிரதிவாதிக்கு எதிராகக் குற்றம் சாட்டப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/253326
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
ஊழல்வழக்குகுமார ஜயகொடிலங்கா உர நிறுவனம்
BestWeb.lk Top Web 2026 June Qualified