Breaking
சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri LankaIndia and Indonesia: Asian giants that refuse to bow to the superpowers – AnalysisIndia launches first hydrogen-powered train in clean energy pushFormer Sri Lankan cricket stars pay tribute to Sir Garfield Sobersசந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri LankaIndia and Indonesia: Asian giants that refuse to bow to the superpowers – AnalysisIndia launches first hydrogen-powered train in clean energy pushFormer Sri Lankan cricket stars pay tribute to Sir Garfield Sobers
பாட அடிப்படையில் 30,000 புதிய ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை - அமைச்சர் சந்தன அபேரத்ன
ScienceVirakesari

பாட அடிப்படையில் 30,000 புதிய ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை - அமைச்சர் சந்தன அபேரத்ன

July 16, 2026·2 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01அரசாங்கம் புதிய ஆசிரியர் நியமன திட்டத்தை அறிவித்துள்ளது.
  2. 022021க்கு பிறகு ஆசிரியர் நியமனங்கள் இல்லை.
  3. 03கணிதம் போன்ற பாடங்களில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது.
  4. 04180,000 விண்ணப்பதாரர்கள் கடந்த பரீட்சைக்கு தோன்றினர்.
  5. 052026க்குள் 30,000 ஆசிரியர்கள் recruited ஆக உள்ளனர்.
  6. 06அதிபர் சேவையில் பிரச்சினைகள் குறித்த கவனம் தேவை.

(எம்.மனோசித்ரா)

நாட்டில் நிலவும் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, பாரம்பரிய முறையிலிருந்து விலகி வரலாற்றில் முதன்முறையாக பாடசாலைகளில் நிலவும் குறிப்பிட்ட பாட வெற்றிடங்களை இலக்காகக் கொண்டு (பாட அடிப்படையில்) ஆசிரியர்களைப் பெற்றுக்கொள்ளும் புதிய வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,

2021ஆம் ஆண்டுக்குப் பின்னர் நாட்டில் முறையான ஆசிரியர் நியமனங்கள் எதுவும் நடைபெறாத நிலையில், நீண்டகாலமாக நிலவி வரும் கணிதம் போன்ற பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறைக்குத் தீர்வாக அந்தந்த பாடங்களில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களையே இந்த புதிய முறையின் கீழ் சேவையில் இணைத்துக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பிற்கு இணங்க, கடந்த மே மாதம் நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்கு பட்டதாரிகள் உட்பட 180,000 தகைமையுள்ள விண்ணப்பதாரர்கள் தோற்றியிருந்தனர். தற்போது அதன் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது.

இந்த வருடத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள உரிய நிதியொதுக்கீடுகள் மற்றும் அனுமதிகளுக்கு அமைய, 2026 ஆம் ஆண்டு முடிவடைவதற்கு முன்னர் சுமார் 30,000 ஆசிரியர்கள் அவசரமாக பாடசாலைக் கட்டமைப்பிற்குள் உள்வாங்கப்படவுள்ளனர். இவற்றுக்கு மேலதிகமாக, அதிபர் சேவையில் நீண்டகாலமாக நிலவி வரும் பிரச்சினைகள் குறித்தும் அமைச்சரவையின் விசேட கவனம் செலுத்தப்பட்டு, அதற்குரிய தீர்வுகளை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/253393
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
அரசாங்கம்ஆசிரியர்கள்நியமனம்பாடசாலைவிண்ணப்பதாரர்கள்
BestWeb.lk Top Web 2026 June Qualified