Breaking
சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri LankaIndia and Indonesia: Asian giants that refuse to bow to the superpowers – AnalysisIndia launches first hydrogen-powered train in clean energy pushFormer Sri Lankan cricket stars pay tribute to Sir Garfield Sobersசந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபரின் மர்ம மரணம்Diesel-Based Power Generation To Be Reduced To 0.5% Within Two YearsDengue Death Toll Rises to 53 as Cases Top 75,000Probe into Former IGP C.D. Wickramaratne’s Death IntensifiesAngolan National Arrested With Cocaine Worth Rs. 10 MillionMahanama addresses conflict of interest claims on LPL roleSweet disguise, bitter ending: Young Malaysian nabbed with cocaine in Sri LankaIndia and Indonesia: Asian giants that refuse to bow to the superpowers – AnalysisIndia launches first hydrogen-powered train in clean energy pushFormer Sri Lankan cricket stars pay tribute to Sir Garfield Sobers
பலவந்தத் தொழிலாளர்களால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் இறக்குமதிக்கு அரசு தடை
BusinessVirakesari

பலவந்தத் தொழிலாளர்களால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் இறக்குமதிக்கு அரசு தடை

July 16, 2026·2 min read
Photo: Virakesari
AI SUMMARYPowered by Claude
Key points from this article
Powered by Claude
  1. 01அரசாங்கம் தொழிலுக்கு பலவந்தமாக அமர்த்திய நபர்களால் தயாரிக்கப்படும் பொருட்களின் இறக்குமதிக்கு தடை.
  2. 02ஜனாதிபதி அநுரகுமாரின் அறிவிப்பின் அடிப்படையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
  3. 03நிறுவனங்கள் இறக்குமதி செய்ய வேண்டிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
  4. 04சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் இதற்கான பொறுப்பாக உள்ளார்.
  5. 05சர்வதேச தொழிலாளர் அமைப்பின் வழிகாட்டல்களின் அடிப்படையில் நிபந்தனைகள் அமல்படுத்தப்படும்.

(நா.தனுஜா)

நபர்களைப் பலவந்தமாகத் தொழிலுக்கு அமர்த்தி, அதனூடாக முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ தயாரிக்கப்பட்ட எந்தவொரு பொருளையும் இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது.

ஜனாதிபதியும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான அநுரகுமார திசாநாயக்க 1969 ஆம் ஆண்டு முதலாம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் ஊடாகத் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் வெளியிட்டுள்ள 2496/38 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரமே மேற்குறிப்பிட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வர்த்தமானி அறிவித்தலின்படி குறித்தவொரு நிறுவனம் அல்லது இலங்கையினால் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் இறக்குமதியாளர்கள், அந்தப் பொருட்கள் முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ நபர்களை பலவந்தமாகத் தொழிலுக்கு அமர்த்தி, அதனூடாகத் தயாரிக்கப்படவில்லை என்பதை உறுதிசெய்யும் வகையில் சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தினால் கோரப்படும் ஆவணங்கள், சான்றிதழ்களைச் சமர்ப்பிக்கவேண்டும்.

அதேபோன்று 'சர்வதேச தொழிலாளர் அமைப்பின் வழிகாட்டல்களின் பிரகாரம், இந்த நிபந்தனைகளுக்குப் பொருந்தக்கூடிய பொருட்கள், நிறுவனங்கள் மற்றும் நாடுகளை விடயதான அமைச்சர் அவ்வப்போது அறிவிக்கமுடியும்' என்றும் அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த நிபந்தனைகள் உரியவாறு நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவதற்குப் பொறுப்பாக சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் செயற்படுவார் என்றும், அந்நிபந்தனைகளை நடைமுறைப்படுத்துவதற்கான நிர்வாக உத்தரவுகளை அவர் பிறப்பிக்கலாம் என்றும் அவ்வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Read the full story on Virakesari.
Pulse Feed shows previews — the complete article is on the original publisher's site.
Virakesari
https://www.virakesari.lk/article/253313
Read Full Article
Opens in a new tab · Pulse Feed is not affiliated with Virakesari
இறக்குமதிபொருட்கள்அரசாங்கம்சங்கிதொழில்
BestWeb.lk Top Web 2026 June Qualified